fbpx

’பிரச்சாரத்தின்போது குழந்தைகளை பேரணி வாகனங்களில் ஏற்ற தடை’..!! தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு..!!

தேர்தல் பிரச்சாரத்தின் போது குழந்தைகளை எந்த வகையிலும் ஈடுபடுத்தக் கூடாது என்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது.

2024 மக்களவைத் தேர்தலின் போது குழந்தைகளை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. தேர்தல் பரப்புரைகளில் குழந்தைகளை பயன்படுத்தக்கூடாது என மாநில தேர்தல் ஆணையத்திற்கு தலைமை தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. சுவரொட்டிகள் ஒட்டுதல், துண்டு பிரசுரம் விநியோகம், முழக்கம் எழுப்புதல், பேரணிகளில் குழந்தைகளை ஈடுபடுத்தக் கூடாது.

அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் குழந்தைகளை கையில் தூக்கி செல்வது, பிரச்சாரம், பேரணி வாகனங்களில் குழந்தைகளை ஏற்றக் கூடாது. மேலும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அருகிலோ, கூட்டங்களில் பெற்றோருடன் குழந்தைகள் பங்கேற்றால் விதிமீறல் இல்லை எனவும் தெரிவித்துள்ளது. அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதன் அவசியத்தை இந்த நடவடிக்கை வலியுறுத்துகிறது.

Chella

Next Post

”என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகத் தயார்”..!! ஹேமந்த் சோரன் அதிரடி..!!

Mon Feb 5 , 2024
தனது மீதுள்ள குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகுவதாக ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார். சுரங்க முறைகேடு வழக்குடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த வாரம் கைது செய்தனர். கைதுக்கு முன்னதாகவே முதலமைச்சர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தார். பின்னர், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான சம்பாய் சோரன் முதல்வராகப் பதவியேற்றார். […]

You May Like