fbpx

அசத்தும் தமிழக அரசு…! “ஸ்டார்‌ 2.0” திட்டம்‌… இனி 1950-ம் ஆண்டு முதல் இணையத்தில் வில்லங்க சான்று…!

தமிழ்நாடு முன்னாள்‌ முதல்வர்‌ கலைஞர்‌ அவர்களால்‌ பதிவுத்துறையில்‌ முன்னோடி திட்டமாக 06.02.2000 முதல்‌ அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஸ்டார்‌’ திட்டம்‌ 2018 முதல்‌ புதிய பரிணாமத்தில்‌ ‘ஸ்டார்‌ 2.0’ திட்டம்‌ நடைமுறைப்படுத்தப்பட்டு பதிவுத்துறையில்‌ அனைத்து சேவைகளும்‌ இணையதளம்‌ வாயிலாக வழங்கப்பட்டு வருகின்றன.

1975 ஆண்டு முதல்‌ தற்போது வரையிலான காலத்திற்குரிய அட்டவணை-॥ பதிவேடு கணினிமயமாக்கப்பட்டு வில்லங்க சான்றுகளை பொதுமக்கள்‌ இணையவழியில்‌ பதிவிறக்கம்‌ செய்து வருகின்றனர்‌. 2021-2022-ஆம்‌ ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில்‌ இந்த வசதி, 01.01.1950 முதல்‌ பதியப்பட்ட அனைத்து ஆவணங்களுக்கும்‌ விரிவுபடுத்தப்படும்‌ என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, 01.01.1950 முதல்‌ 31.12.1974 வரையிலான காலத்திற்குரிய வில்லங்கச்‌ சான்றுகளை இணைய வழியில்‌ பொதுமக்கள்‌ பார்வையிடவும்‌ மற்றும்‌ பதிவிறக்கம்‌ செய்ய ஏதுவாகவும்‌ மேற்கண்ட காலத்திற்கான அட்டவணை-॥ பதிவேட்டினை ரூ.36.58 கோடி மதிப்பீட்டில்‌ கணினியில்‌ மேலேற்றம்‌ செய்வதற்கு நிர்வாக அனுமதி மற்றும்‌ நிதி ஒதுக்கீடு அளித்து அரசாணை வெளியிடப்பட் டுள்ளது.

இப்பணி முடிவடைந்தவுடன்‌ 1950 முதல்‌ இன்றைய நாள்‌ வரையிலான வில்லங்க சான்றுகளை பொதுமக்கள்‌ இணையதள வாயிலாக பார்வையிடவும்‌, அதன்‌ பிரதிகளை கட்டணம்‌ ஏதுமின்றி பதிவிறக்கம்‌ செய்து கொள்ளவும்‌ இயலும்‌.

Vignesh

Next Post

அட்டகாசம்...! மாணவர்களுக்கு ஊக்கத்‌ தொகை ரூ.1,500-லிருந்து ரூ.2,000 ஆக உயர்வு...! தமிழக அரசு...

Fri Jul 28 , 2023
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்கள்‌ சார்பில்‌ அர்ச்சகர்‌, ஓதுவார்‌, தவில்‌ மற்றும்‌ நாதஸ்வரம்‌, பிரபந்த விண்ணப்பர்‌, வேத ஆகம பாடசாலைகள்‌ என 15 பயிற்சிப்‌ பள்ளிகள்‌ இயங்கி வருகின்றன. இப்பயிற்சிப்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவர்களுக்கு உணவு, சீருடை, உறைவிட வசதிகளுடன்‌ கட்டணமில்லாமல்‌ பயிற்சியும்‌, ஊக்கத்‌ தொகையாக மாதம்‌ ஒன்றுக்கு ரூ.3,000/- மற்றும்‌ பகுதி நேரத்தில்‌ பயிலும்‌ மாணவர்களுக்கு மாத ஊக்கதொகை ரூ.1500/- வழங்கப்பட்டு வருகிறது. முன்னாள்‌ முதலமைச்சர்‌ முத்தமிழறிஞர்‌ […]

You May Like