பீகார் முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி திங்கள்கிழமை காலமானார். புற்றுநோயுடன் போராடி வந்த அவர் டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 72.
சுஷில் குமார் மோடி ஜனவரி 5, 1952 இல் பாட்னாவில் பிறந்தார், மேலும் பீகார் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பீகார் நிதி அமைச்சர் உட்பட பல்வேறு பதவிகளில் பணியாற்றினார். நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமையிலான இயக்கத்தில் சேர்ந்தார். அவரது அரசியல் வாழ்க்கை அங்கிருந்து தான் தொடங்கியது. அவர் 1990 இல் தீவிரமாக அரசியலில் ஈடுபட்டார். முதன்முறையாக, பீகாரில் உள்ள கும்ஹார் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் சுஷில் குமார் மோடி 2004 தேர்தலில் பீகாரில் உள்ள பாகல்பூரில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பாராளுமன்றத்தின் மேல் சபையான ராஜ்யசபா உறுப்பினராகவும் இருந்தார். கால்நடை தீவன ஊழல் வழக்கில் ஆர்ஜேடி தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவுக்கு எதிராக பாட்னா உயர்நீதிமன்றத்தில் சுஷில் குமார் மோடி பொதுநல வழக்கு தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக பீகார் தலைவரும், துணை முதல்வருமான பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வரும், முன்னாள் ராஜ்யசபா எம்பியுமான சுஷில் குமார் மோடியின் மறைவுக்கு நெஞ்சார்ந்த அஞ்சலி. இது பீகார் பாஜகவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.