Property Tax | சொத்து வரி என்பது ஒரு நகரத்திற்கும் சரி, வீடு வாங்குவோருக்கும் சரி, மிக முக்கியமானது. மாநகராட்சி அல்லது நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் தேவையான அடிப்படை கட்டமைப்புகள், சுகாதார தூய்மைப் பணிகள், திடக்கழிவுகள் அகற்றுதல், தெரு விளக்குகள், பூங்காக்கள் மற்றும் சாலைகள் பராமரித்தல், பொது சுகாதாரம் நோய் தடுப்பு பணி போன்ற அத்தியாவசிய பணிகளுக்கு சொத்து வரி மிக முக்கியம். இந்த சொத்து வரி என்பது நகராட்சி அலுவலகம் பராமரித்து வரும் சொத்து வரி பதிவேடுகளில் இருக்கும்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்து உரிமையாளர்கள் குடிநீர் வரி, சொத்து வரி போன்ற வரிகள் செலுத்துவதற்கு மாநகராட்சி வளாகங்களில் அமைந்துள்ள இ-சேவை மையங்கள், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங், காசோலை மற்றும் வரைவோலை வாயிலாக தங்களது சொத்துவரியினை எளிதாக செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், QR கோடு ஸ்கேன் செய்து சொத்து வரி செலுத்த முடியும்.
இந்நிலையில், நடப்பாண்டுக்கான சொத்து வரியை இன்று (மார்ச் 31) செலுத்தாவிட்டால், அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சொத்து வரி செலுத்துவதற்கான அவகாசம் இன்றுடன் முடியவுள்ள நிலையில், சொத்து வரியை செலுத்துமாறு மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும், சொத்து வரி நிலுவை வைத்துள்ள கடைகள் முன்பு நோட்டீஸும் ஒட்டப்பட்டுள்ளது.
Read More : நாளை முதல் தொடங்கும் புதிய நிதியாண்டு!. RBI-ன் கடன் கொள்கை முதலீட்டாளர்களுக்கு எப்படி இருக்கும்?