QR கோடு ஸ்கேன் செய்த அதன் மூலம் சொத்து வரி செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்து உரிமையாளர்கள் குடிநீர் வரி, சொத்து வரி போன்ற வரிகள் செலுத்துவதற்கு மாநகராட்சி வளாகங்களில் அமைந்துள்ள இ-சேவை மையங்கள் , கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங், காசோலை மற்றும் வரைவோலை வாயிலாக தங்களது சொத்துவரியினை எளிதாக செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தற்போது QR கோடு ஸ்கேன் செய்த அதன் மூலம் சொத்து வரி செலுத்தும் நடைமுறையை கொண்டு வர அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கு தனி செயலியும் உருவாக்கப்பட்டு வருகிறது. தங்கள் பகுதியில் உள்ள குறைகளையும் புகாராக தெரிவிக்க முடியும். பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகள், மருத்துவம், குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் புகார் அளிக்கும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த சேவை பரிசோதனை அடிப்படையில் முதல் கட்டமாக 48-வார்டு பகுதியில் அனைத்து வீடுகளிலும் QR கோடு ஒட்டப்பட்டு வருகிறது. இதன் பின்னர் மாநகராட்சி முழுவதும் QR கோடு ஒட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இந்த சேவையானது அனைத்து நாடுகளுக்கும் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் பொதுமக்களில் தங்களது சொத்து வரியை எளிதில் செலுத்த முடியும்.