fbpx

பிரபல நட்சத்திர ஹோட்டலில் ஜோராக நடந்த விபச்சார தொழில்..!! திடீரென உள்ளே நுழைந்த போலீஸ்..!! எத்தனை பெண்கள்..?

சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதுாரில் ‘ஹெவன் கேட்’ என்ற தனியார் 3 ஸ்டார் ஹோட்டல் இயங்கி வருகிறது. இந்த ஹோட்டலில் பெண்களை வைத்து, பாலியல் தொழில் நடத்தி வருவதாக ஸ்ரீபெரும்புதுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கண்காணித்து வந்தனர்.

பின்னர், சமயம் பார்த்து ஹோட்டலுக்குள் அதிரடியாக நுழைந்த போலீசார், சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஹோட்டலில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்தது வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து, பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த சென்னையைச் சேர்ந்த காயத்திரி (வயது 30) என்பவரை கைது செய்தனர்.

மேலும், பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த 5 பெண்களையும் மீட்டு, சென்னையில் உள்ள மகளிர் கூர்நோக்கு இல்லத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும், இதே போல ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பல்வேறு நட்சத்திர ஹோட்டல்களில் ஸ்பா என்கின்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Read More : பரந்தூர் செல்லும் விஜய்க்கு அதிரடி கட்டுப்பாடுகள் விதித்த காவல்துறை..!! மீறினால் கைது செய்ய திட்டமா..?

English Summary

The police rescued the five women who were involved in sex work and sent them to a women’s shelter in Chennai.

Chella

Next Post

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி அறிவிப்பு…! ஜெய்ஸ்வால், கில் என களைகட்டும் அணி…

Sat Jan 18 , 2025
Indian Team Announcement for ICC Champions Trophy...! Weeding team like Jaiswal, Gill...

You May Like