தாய்லாந்தை சேர்ந்த இளம்பெண்களை ஏமாற்றி இந்தியா அழைத்து வந்து மசாஜ் பார்லர் என்ற பெயரில் விபச்சாரத்தில் ஈடுபட வைத்த சம்பவம் பெங்களூருவில் அரங்கேறியுள்ளது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 7 தாய்லாந்து இளம்பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூருவில் பிரபல ஐடி நிறுவனங்கள் உள்பட பல்வேறு முன்னணி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. கர்நாடகா மட்டுமின்றி இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்து ஏராளமானவர்கள் வசித்து வருகின்றனர். குறிப்பாக வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வேலைக்காக பெங்களூர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், நல்ல சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி தாய்லாந்தை சேர்ந்த 7 இளம்பெண்களை விபச்சாரத்தில் தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் எலகங்கா நியூ டவுனில் ‛ரோரா லக்சரி தாய் ஸ்பா’ என்ற பெயரில் மசாஜ் பார்லர் செயல்பட்டு வருகிறது. இங்கு இளம்பெண்களை வைத்து விபச்சாரம் நடக்கிறது. வாடிக்கையாளர்கள் போல் வரும் நபர்கள் பணம் கொடுத்து உல்லாசம் அனுபவித்து செல்வதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் அந்த மசாஜ் பார்லரை தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், திடீரென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது மசாஜ் பார்லரில் விபச்சாரம் நடப்பது தெரியவந்தது.
இதையடுத்து விபச்சாரம் நடத்திய 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில் அவர்களின் பெயர்கள் ஆஞ்சநேய கவுடா மற்றும் ஹரீஸ் என்பது தெரியவந்தது. மேலும் விபசாரத்தில் தள்ளப்பட்ட 7 இளம்பெண்களை போலீசார் மீட்டனர். இதுதொடர்பன விசாரணையில், மீட்கப்பட்ட இளம்பெண்கள் அனைவரும் தாய்லாந்தை சேர்ந்தவர்கள். தாய்லாந்தில் வேலை செய்து வந்த அவர்களை நல்ல சம்பளத்தில் பெங்களூரில் வேலை வாங்கி தருவதாக ஒரு கும்பல் கூறியுள்ளது.
இதையடுத்து, அவர்கள் சுற்றுலா விசா மற்றும் தொழில்முறை விசாவில் பெங்களூர் வந்துள்ளனர். பிறகு அவர்களை அந்த கும்பல் விபசாரத்தில் தள்ளியது தெரியவந்தது. மீட்கப்பட்ட 7 தாய்லாந்து இளம்பெண்களும் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். கைதானவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் தொடர்புடையவர்களை பிடிக்கும் முனைப்பில் போலீசார் செயல்பட்டு வருகின்றனர்.
Read More : School | ‘இனி இந்த வயதிலும் ஆசிரியர் பணியில் சேரலாம்’..!! தமிழ்நாடு அரசு அதிரடி..!!