fbpx

குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான புரோட்டீன் அண்ட் மினரல்ஸ்!… காலிஃபிளவர் இலைகளின் மருத்துவ பயன்கள்!…

எண்ணற்ற மருத்துவ பயன்களை தரும்காலிஃபிளவர் இலைகளை சமைத்து சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் உள்ளன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

காலிஃபிளவர் பூவின் மூலம் சில்லி, குழம்பு, பொரியல் உள்ளிட்ட உணவுகளை பலரும் விரும்பி ருசித்து சாப்பிடுவோம். ஆனால், நாம் வழக்கமாக காலிஃபிளவரில் உள்ள பூக்களை மட்டுமே எடுத்து சமைத்து சாப்பிடுவோம். அதனை சுற்றி உள்ள இலைகளை எடுத்து குப்பையில் வீசி விடுகிறோம். இதுமட்டுமல்லாம், சந்தைகளிலேயே அதன் இலைகளை வெட்டி எடுத்து விட்டு தான் வீட்டுக்கு எடுத்து செல்வோம். ஆனால் இப்படி தூக்கி எறியப்படும் காலிஃபிளவர் இலைகள் காலிஃபிளவர் பூக்களுக்கு இணையான பல்வேறு ஊட்டச் சத்துக்களை உள்ளடக்கியதால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. காலிஃபிளவரில் இருப்பதை விட காலிஃபிளவர் இலைகளில் அதிக அளவிலான ப்ரோட்டீன்கள் காணப்படுகிறது.

மேலும் இதில் அதிக அளவிலான மினரல்ஸும் உள்ளது. இவைகள் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவுகிறது. மேலும் இதனை ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு தினமும் சமைத்து சாப்பிட தரலாம். இவ்வாறு குழந்தைகளுக்கு தருவதால் அவர்களின் எடை,உயரம் மற்றும் ஹீமோகுளோபின் அளவில் நல்ல முன்னேற்றம் காணப்படும் .இதிலுள்ள கால்சியம் பற்கள் மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதுவுகிறது. மேலும் உயர் இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்திகிறது. தவிர போஸ்ட்மெனோபாஸினால் உண்டாகும் பிரச்னைகளை குறைக்கும் தன்மை கொண்டது.

இதிலுள்ள வைட்டமின் ஏ கண்ணின் ஆரோக்கியத்தினை பராமரிக்கவும் மேலும் மாலைக்கண் நோய் ஏற்படும் ஆபாயத்தை தடுக்க பயன்படுகிறது என்று பல்வேறு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. காலிஃபிளவர் இலைகளில் அதிகமாக காணப்படும் மற்றொரு முக்கிய ஊட்டச்சத்து நார்ச்சத்து ஆகும். இந்த நார்சத்து செரிமானம் மற்றும் குடல் இயக்கத்திற்கு பெரிதும் துணை புரிகிறது. மேலும் இதனை உடல் எடையை குறைக்க விருப்புபவர்கள் இதனைதொடர்ந்து உணவில் எடுத்து வந்தால் உடலை இருக்கும் தேவையற்ற கழிவுகளை உடம்பில் இருந்து வெளியேற்றி உடலை சுத்தப்படுத்துவதுடன் உடல் எடையை குறைக்கும் பணியை சிறக்க செய்கிறது.

Kokila

Next Post

மாணவர்களே தேர்வு பயமா?... மன அழுத்தத்தை குறைக்க சில எளிய வழிமுறைகள் இதோ!...

Tue Mar 14 , 2023
பொதுத்தேர்வில் எழுதும் மாணவர்கள் தேர்வுகளை நினைத்து அவ்வபோது மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர் என்று ஆய்வுகள் கூறியுள்ள நிலையில், அதனை போக்கு சில வழிமுறைகளை இந்த தொகுப்பில் தெரிந்துக்கொள்ளலாம். மாணவ, மாணவிகள் அனைவரும் தங்களது ஆண்டு இறுதி தேர்வுகளை எதிர்நோக்கி உள்ளனர். இந்த சமயத்தில் தூங்காமல் கண் விழித்து படிப்பது, சரியான உணவு பழக்கங்களை கடைபிடிக்காமல் இருப்பது உள்ளிட்டவைகளால் உடலில் பல்வேறு பாதிப்புகளை உண்டாக்கும். அதே நேரத்தில் சில மாணவர்கள் தேர்வுகளை […]

You May Like