fbpx

பல நாடுகளில் ஹிஜாப்புக்கு எதிராக போராட்டம்; ஈரானில் 31 பேர் உயிரிழப்பு…!

ஈரானில் பெண்களுக்கு உடை கட்டுப்பாடு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஹிஜாப் அணிவது கட்டாயப்படுத்தப்படுகிறது. கட்டுப்பாடுகளை மீறும் பெண்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண்ணை காவல்துறையினர் கைது செய்து கடுமையாக தாக்கியதால், படுகாயமடைந்தார். இந்நிலையில் மாஷா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் கடந்த 17-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மாஷா அமினி உயிரிழந்த சம்பவம் ஈரானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், மாஷா மாரடைப்பால் உயிரிழந்ததாக ஈரான் காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில், மாஷா அமினிக்கு ஆதரவாக ஈரானின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 18-ஆம் தேதி முதல் ஹிஜாப்பிற்கு எதிராக பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஈரானில் ஹிஜாப்பிற்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் போராட்டம் மற்ற நாடுகளுக்கும் பரவி வருகிறது. ஈரானில் ஹிஜாப்பிற்கு எதிராக பெண்கள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவாக துருக்கியில் இஸ்லாமிய பெண்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதேபோல், கனடாவிலும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு பெருகி வரும் நிலையில், ஈரானில் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே உண்டான மோதலில் இதுவரை 31 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Rupa

Next Post

’உயர்கல்வி பயிலாத மாணவர்களா நீங்கள்’..? ’உங்களின் விவரங்களை அரசு கேட்கிறது’..!!

Fri Sep 23 , 2022
உயர்கல்வி பயிலாத மாணவர்களின் விவரங்களை அனுப்ப மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 2021-2022ஆம் கல்வியாண்டில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு முடித்தவர்களில் 8,588 பேர் உயர்கல்வி பயில விண்ணப்பிக்கவில்லை என்றும் அவர்கள் எந்தவித உயர்கல்வி படிப்புகளிலும் சேரவில்லை என்றும் பள்ளிக்கல்வித்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அதனால், உயர்கல்வி பயிலாத மாணவர்களின் விவரங்களை அந்தந்த பள்ளி நிர்வாகம் பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அந்த மாணவர்களை தனித்தனியே […]

You May Like