fbpx

பட்டாசு ஆலைகள் மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்பு..!! இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்..!!

தீபாவளி பண்டிகை வந்தாலே பட்டாசு தான் நினைவுக்கு வரும். பட்டாசு என்றாலே சிவகாசி தான். இந்தியாவின் பட்டாசு உற்பத்தியில் 90 சதவீத பட்டாசுகள் சிவகாசியில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. பட்டாசு சார்ந்த தீப்பெட்டி தொழில், அச்சு தொழிலும் நடந்து வருகிறது.

இந்நிலையில் தான், இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. சமீபகாலமாக பல்வேறு பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலர் உயிரிழந்தனர்.

இதனைத் தடுக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், சரவெடி உற்பத்தி பட்டாசு ஆலைகள் மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More : இனி டிரைவிங் லைசென்ஸ் பெறுவது இவ்வளவு ஈசியா..? ஜூன் 1ஆம் தேதி முதல் அமல்..!! இனி பயிற்சி மையம் தான் எல்லாம்..!!

English Summary

Crackers and Cap Explosive Manufacturers Association has announced that they will go on an indefinite strike from today.

Chella

Next Post

அந்த சில நிமிடங்கள்!… ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்து!… முதல் விசாரணை அறிக்கை வெளியானது!

Fri May 24 , 2024
Raisi Helicopter Crash: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் அவருடன் சென்ற அதிகாரிகளின் மரணத்திற்கு வழிவகுத்த ஹெலிகாப்டர் விபத்து குறித்த முதல் விசாரணை அறிக்கையை அந்நாட்டு ஆயுதப் படையினர் வெளியிட்டுள்ளனர். ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி உயிரிழந்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பல்வேறு கேள்விகள் எழுந்து வருகின்றன. மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்துக்குள்ளானதா? தொழில்நுட்பக் கோளாறால் விபத்து ஏற்பட்டதா? […]

You May Like