England: இங்கிலாந்தில் குப்பை சேகரிப்போர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மலைபோல் தேங்கிய குப்பைகளால் புழுக்கள், நரி, எலிகள் தொல்லை அதிகரித்து வருவதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இங்கிலாந்தின் 2-வது மிக பெரிய நகரான பிர்மிங்காமில் குப்பைகளை சேகரிப்போர் ஒரு மாத காலத்திற்கு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊதிய முரண்பாடு, பதவி உள்ளிட்ட விவகாரங்களை முன்னிட்டு அவர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கியுள்ளனர். இதனால், குப்பைகள் சாலைகள் முழுவதும் தேங்கியுள்ளன. அதில் இருந்து கிளம்பும் துர்நாற்றம் காற்றில் பரவி மக்களை துன்பத்திற்கு ஆளாக்கி வருகிறது. இதனால், மொத்தம் 17 ஆயிரம் டன் குப்பைகள் சேர்ந்துள்ளன. ஏறக்குறைய 400 பேர் வரை இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அந்நகரில் 11 லட்சம் பேர் வரை குடியிருப்புவாசிகள் உள்ளனர். அவர்களின் வீடு வழியே குப்பைகளை சேகரிக்கும் ஏதேனும் ஒரு வாகனம் சென்றால் மக்கள் திரளாக ஓடி செல்கின்றனர்.
குவிந்து கிடக்கும் குப்பைகளை கிளறுவதற்காக பூனை அளவுள்ள எலிகளும், நரிகளும் மற்றும் பூனைகளும் சுற்றி திரிகின்றன. குப்பைகளில் புழுக்களும் நெளிந்து செல்கின்றன. இதுபற்றிய வீடியோவும் வைரலானது. இதேபோன்று குப்பைகளை சேகரிக்க சென்றவர்களை எலிகள் விரட்டி செல்லும் மற்றொரு வீடியோவும் வைரலானது. இதனால், இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மருக்கு அரசியல் ரீதியாக எதிர்ப்பு கிளம்பி வருகிறது. எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் புயலை கிளப்பியுள்ளன. ஸ்டார்மரும் இதனை ஒப்பு கொண்டிருக்கிறார். இது முற்றிலும் ஏற்று கொள்ள முடியாதது என்று அவர் கூறியுள்ளார்.
Readmore: அலெர்ட் வந்தாச்சு!. வங்கக்கடலில் புயல் சின்னம்!. வானிலை ஆய்வு மையம் அப்டேட்!