PSLV-c59: இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் சூரியனின் ஒளிவட்டப் பாதையை கண்காணிப்பதற்காக PSLV-c59 ராக்கெட்டை இன்று விண்ணில் செலுத்த உள்ளது. இது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி., – சி59 ராக்கெட் இன்று மாலை, 4:08 மணிக்கு விண்ணில் பாய்கிறது.
ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ‘புரோபா-3’ என்று பெயரிடப்பட்ட இணை செயற்கைகோளை (2 செயற்கைகோள்கள்) உருவாக்கி உள்ளது. இந்த செயற்கைகோள்கள் சூரியனின் ஒளிவட்டப் பகுதியை ஆய்வு செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மொத்தம், 550 கிலோ எடை உடைய இந்த செயற்கைக்கோள்களை சுமந்தபடி விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
இதற்கான, 25 மணி நேர, ‘கவுன்ட் டவுன்’ நேற்று பிற்பகல், 3:08 மணிக்கு துவங்கியது. ராக்கெட்டின் இயக்கம் மற்றும் செயல்பாடுகளை, இஸ்ரோ விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர்.
Readmore: இந்தியர்கள் விலங்குகளாக தெரிகிறார்களா?. பில்கேட்ஸின் கருத்துக்கு கடும் கண்டனம்!.