fbpx

உங்க ரேஷன் கார்டில் திருத்தம் உள்ளதா…? இன்று காலை 10 முதல் முகாம்… மறக்காம செஞ்சி முடிச்சிடுங்க…!

பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம், இன்று காலை 10 முதல் நடைபெற்ற உள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; 2022- ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம், சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. அதில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தல், புதிய குடும்ப அட்டை / நகல் குடும்ப அட்டை கோரும் மனுகளைப்பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும். நியாய விலைக்கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்தகுடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச்சான்று வழங்கப்படும்.

பொது விநியோகக்கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் உள்ள குறைபாடுகள் உள்ளிட்டப்புகார்களை இந்த முகாமில் தெரிக்கலாம் என்றும், மக்களின் குறைகளை விரைந்து தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் 19 மண்டலங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்த முகாமை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.

Vignesh

Next Post

தமிழகத்தில் 13,14,15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் வெளுத்து வாங்க போகும் கனமழை...! எல்லாம் உஷாரா இருங்க...! வானிலை மையம் எச்சரிக்கை....

Sat Aug 13 , 2022
தமிழகத்தில் வரும் 16-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக; இன்று முதல் வரும் 15-ம் தேதி வரை நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 16-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் […]

You May Like