பொதுத்துறை வங்கிகள் எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு உள்ளிட்டவை மூலமாக காலிப்பணியிடங்களை நிரப்பி வருகின்றன. அந்த வகையில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா சிறப்பு அதிகாரிகளுக்கான காலி பணியிடங்களை வெளியிட்டுள்ளது.
பணியிடங்கள் எண்ணிக்கை : சிறப்பு அதிகாரிகள் பிரிவில் சிவில், எலெக்ட்ரிக்கல், தீயணைப்பு என மொத்தம் 169 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உதவி மேலாளர் (சிவில்) 43
உதவி மேலாளர் (எலெக்ட்ரிக்கல்) 25
உதவி மேலாளர் (தீயணைப்பு) 101
வயது தகுதி : 2024 அக்டோபர் 1-ம் தேதி அன்று, குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபடியாக 30 வயது வரை இருக்கலாம். மத்திய அரசின் படி வயது வரம்பில் தளர்வு உள்ளது.
கல்வித்தகுதி : துறை சார்ந்த பிரிவில் B.E / B. Tech பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். சிவில் பிரிவிற்கு சிவில் இன்ஜினியரிங் மற்றும் எலெக்ட்ரிக்கல் பிரிவிற்கு எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும்.
பணி அனுபவம் : குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் வரை பணி அனுபவம் இருக்க வேண்டும்.
ஊதியம் : சிறப்பு அதிகாரிகள் பிரிவில், உதவி மேலாளர் காலிப்பணியிடங்களுக்கு ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://sbi.co.in/ என்ற இணையதளத்தில் உள்ள ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.750 வசூலிக்கப்படுகிறது. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.
Read more ; தமிழ்நாட்டில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கப் போகும் மழை..!! 7 நாட்களுக்கு சம்பவம் இருக்கு..!!