புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தின் சமுதாயக் கல்லூரியில் 2023-24 -ஆம் கல்வி ஆண்டிற்க்கான இளங்கலை, முதுநிலைபட்டயம், பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி (01-06-2023) வியாழக்கிழமை முதல் ஜூன் மாதம் முப்பதாம் தேதி வெள்ளிக்கிழமை (30-06-2023) வரை சமுதாயக் கல்லூரியின் இணையதளமான http://pucc.edu.in மூலம் விண்ணப்பிக்கலாம்.
புதுவைப் பல்கலைக்கழகச் சமுதாயக் கல்லூரியில் படித்து பயன்பெற விரும்புபவர்கள் புதுவைப் பல்கலைக்கழகச் சமுதாயக் கல்லூரியின் இணையதளமான http://pucc.edu.in மூலமாக விண்ணப்பித்து ஜூலை மாதம் நடைபெறவிருக்கின்ற மாணவர் சேர்க்கையில் கலந்து கொண்டு பயன்பெறலாம். புதுவைப் பல்கலைக்கழகச் சமுதாயக் கல்லூரியில் கற்றுக் கொடுக்கப்படும் இளங்கலை, முதுநிலை பட்டயம், பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகள் பற்றிய விவரங்கள் சமுதாயக்கல்லூரியின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.