fbpx

பந்துவீச்சில் டெல்லியைதிணறவைத்த பஞ்சாப்!… 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!…

ஐபிஎல் தொடரில் 31 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

16-வது ஐபிஎல் தொடரின் இறுதிக்கட்ட பரபரப்பான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், டெல்லி அருண் ஜெட்லீ ஸ்டேடியத்தில் நடைபெற்ற 59வது லீக் போட்டியில் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, பஞ்சாப் அணியில் முதலில் பிரப்சிம்ரன் சிங் மற்றும் ஷிகர் தவான் தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கினர். இதில் ஷிகர் தவான் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பிரப்சிம்ரன் சிங் அதிரடியாக விளையாடி பவுண்டரிகள், சிக்ஸர்கள் எனப் பறக்கவிட்டு 63 பந்துகளில் சதமடித்து அசத்தினார். முடிவில் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 168 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியில் முதலில் களமிறங்கிய, டேவிட் வார்னர் மற்றும் பிலிப் சால்ட் நல்லத் தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். ஒருபுறம் வார்னர் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த நிலையில், மறுபுறம் பிலிப் சால்ட் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அவரையடுத்து, களமிறங்கிய டெல்லி அணி வீரர்கள் பஞ்சாப் அணியின் பந்துவீச்சில் சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் களத்தை விட்டு வெளியேறினர். அதன்பின் ஹக்கிம் கான், பிரவீன் துபே ஜோடி பொறுப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் பஞ்சாப் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெல்லி அணியில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 54 ரன்களும், பிலிப் சால்ட் 21 ரன்களும் குவித்துள்ளனர். பஞ்சாப் அணியில் ஹர்ப்ரீத் ப்ரார் தனது சிறப்பான பந்துவீச்சால் 4 விக்கெட்டுகளையும், நாதன் எல்லிஸ் மற்றும் ராகுல் சாஹர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். இந்த போட்டியின் சிறந்த வீரராக பிரப்சிம்ரன் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Kokila

Next Post

வரும் நாட்களில் இந்த மாநிலங்களில் வெப்ப அலை கடுமையாக வீசும்!... வானிலை ஆய்வு மையம் தகவல்!

Sun May 14 , 2023
வரும் நாட்களில் 9 மாநிலங்கள் வெப்ப நிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. குஜராத் மற்றும் ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் வெப்ப அலை நிலைகள் மிகவும் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் பீகார், ஒடிசா மற்றும் கங்கை மேற்கு வங்காளம் மற்றும் மே 14 […]

You May Like