உத்தரப்பிரதேசத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட ஐஸ்கிரீமில் பூரான் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவைச் சேர்ந்த தீபாதேவி என்ற பெண் தனது 5 வயது மகனுக்கு மாம்பழ மில்க் ஷேக் செய்வதற்காக ஆன்லைன் டெலிவரி தளமான ப்ளிங்கிட் மூலம் அமுல் ஐஸ்கிரீமை ஆர்டர் செய்திருக்கிறார். ஐஸ்கிரீம் டெலிவரி செய்யப்பட்டதும் அதனை திறந்து பார்த்துள்ளார். அதனை திறந்தவுடன் ஐஸ்கிரீமுடன் உறைந்திருந்த பூரானைக் கண்ட தீபா தேவி அதிர்ச்சியடைந்துள்ளார். தற்போது, இந்த சம்பவத்தின் காட்சிகளை தீபா பகிர்ந்துள்ள நிலையில், அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில், இதே போன்ற மற்றோரு ஒரு அதிர்ச்சிக்குரிய சம்பவம் மும்பையில் நடந்தது. ஒரு நபர் ஆன்லைனில் ஆர்டர் செய்த கோன் ஐஸ்கிரீமில் மனித விரல் கிடந்தது. Yummo நிறுவன பட்டர்ஸ்காட்ச் கோனில் 2 சென்டிமீட்டர் நீளமுள்ள துண்டிக்கப்பட்ட மனித விரல் இருப்பதைக் கண்டு பெண் மருத்துவர் ஒருவர் போலீஸாரிடம் புகார் அளித்த நிலையில், அது தொடர்பாக, எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தற்போது இந்த வீடியோயும் இணையதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் விரும்பி உண்ணும் உணவாக ஐஸ் கிரீம் இருந்து வருகிறது. ஆன்லைனில் ஆர்டர் செய்யும் ஐஸ் க்ரீம்களில் பாதுகாப்பு கருதாமல், மனித விரல், பூரான் போன்றவை இருப்பது நிறுவனத்தின் அலட்சியத்தை காட்டுகிறது.
Read more ; பூமி உள்மையத்தின் சுழற்சி வேகம் குறைந்து வருவதை விஞ்ஞானிகள் உறுதி செய்தனர்!!