fbpx

இன்று புரட்டாசி சனிக்கிழமை..!! பெருமாளுக்கு துளசி கொடுத்து வணங்கினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா..?

இன்று புரட்டாசி மாத சனிக்கிழமை. மறக்காமல் பெருமாளை தரிசனம் செய்து துளசி தீர்த்தம் பருகி, கோவிந்தனின் திருநாமங்களைச் சொல்லி வேண்டிக் கொள்ளுங்கள். உங்கள் பிரச்சனைகள் அனைத்தையும் பெருமாள் தீர்த்து வைப்பார். புரட்டாசி மாதத்தின் அனைத்து நாட்களுமே பெருமாளை வழிபாடு செய்வதும், பெருமாள் கோயிலுக்குச் சென்று தரிசிப்பதும், புண்ணியமும் நற்பலன்களும் தந்தருளக் கூடியவை.

பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாதத்தில் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விசேஷ அலங்காரங்களும், ஆராதனைகளும் நடைபெறும். இம்மாதத்தில் பெருமாளுக்கு ஒரு கைப்பிடி துளசி கொடுத்தாலே, அதில் மகிழ்ந்து நாம் கேட்கும் வரங்களை அருள்வார் பெருமாள். ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபடும் பக்தர்களைப் போல, புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் குடும்பத்துடன் பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபடும் பக்தர்களும் இருக்கின்றனர்.

இன்று மறக்காமல் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று தரிசியுங்கள். முடிந்தால் பெருமாளுக்கு துளசி சார்த்துங்கள். தாயாருக்கு வெண்மை நிற பூக்கள் கொண்ட மாலையை, வெண் தாமரை மலர்களைச் சார்த்துங்கள். அதேபோல், கோவிலுக்கு சென்று விட்டு, ஒரு ஐந்து பேருக்கேனும் தயிர்சாதம் அல்லது புளியோதரையை தானமாக வழங்குங்கள். நம் மனதில் உள்ள பயத்தையெல்லாம் போக்கியருளுவார் பெருமாள். திருமணம் முதலானவற்றுக்கு இதுவரை இருந்த தடைகளை எல்லாம் தகர்த்து அருளுவார்.

Read More : உங்கள் வீட்டில் இருக்கும் கேஸ் சிலிண்டரில் இந்த விஷயத்தை கவனிச்சீங்களா..? மறந்துறாதீங்க..!!

English Summary

Today is Saturday in Puratasi month. Don’t forget to visit Perumal and drink Tulsi Thirtham and pray by chanting the names of Govinda.

Chella

Next Post

’சகுனிகள் இருக்கும் சமுதாயம்’..!! ’பிழைக்கிறது ரொம்ப கஷ்டம்’..!! யாரை தாக்கிப் பேசினார் ரஜினி..?

Sat Sep 21 , 2024
If you are good in this society where there are Sakunis, you cannot survive.

You May Like