fbpx

1.10 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் நிறுத்தம்..!! வரும் 11ஆம் தேதி வெடிக்கும் போராட்டம்..!! எச்சரிக்கை..!!

ஆவின் பால் கொள்முதலுக்கான விலையை உயர்த்த வேண்டும் என தொடர்ச்சியாக பால் உற்பத்தியாளர்கள் பலமுறை கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஆவின் பால் கொள்முதலுக்கான விலையை குறைத்து வழங்குவதன் மூலம் பால் உற்பத்தியாளர்கள், தனியார் பால் நிறுவனங்களுக்கு பால் வழங்கி வருவதால், ஆவின் பால் பண்ணையில் ஆவின் பால் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில், மதுரை மத்திய பால்பண்ணையில் பொது மேலாளரை சந்தித்த தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.7 உயர்த்த வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், தங்களது கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்றாவிட்டால் வரும் 11ஆம் தேதி பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். தனியார் பால் நிறுவனம் பால் கொள்முதல் விலையை ரூ.35 முதல் ரூ.38 வரைக்கும் வழங்கக்கூடிய நிலையில், ஆவின் பால் நிறுவனம் உற்பத்தி ரூ.32 வரை தான் வழங்கி வருகிறது. இதில் பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.28 மட்டுமே செல்கின்றது. இதனால் ஆவின் பால் உற்பத்தியாளர்கள், தனியார் பால் நிறுவனங்களுக்கு பால் கொள்முதலை வழங்கி வருவதன் காரணமாக மதுரை ஆவின் பால்பண்ணையில் நாளொன்றுக்கு 1 லட்சத்து 92 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் தற்பொழுது 1 லட்சத்து 38 ஆயிரம் லிட்டராக குறைந்துள்ளது. இதனால், பால் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

கடந்த 4 ஆண்டுகளாக 10 ரூபாய் கொள்முதல் விலை உயர்த்த கோரியும் 3 ரூபாய் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வரும் 11ஆம் தேதிக்குள் அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்துள்ளனர். அன்றைய தினம் உசிலம்பட்டி , செல்லம்பட்டி, சேடபட்டி, திருமங்கலம், உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து செல்லக்கூடிய 1 லட்சத்து 10 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதலை நிறுத்துவோம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Chella

Next Post

’அது மட்டும் என்கூட’..!! ’கல்யாணம் வேற ஒருத்தி கூடவா’..? கள்ளக்காதலியை தீவைத்துக் கொன்ற இளைஞர்..!!

Wed Mar 1 , 2023
திருமணத்திற்கு இடையூறாக இருந்த கள்ளக்காதலி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்துள்ள கிராமத்தை சேர்ந்தவர் பிரேமா (30). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த விஜய் (25) என்பவருடன் பிரேமாவுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், விஜய்க்கு […]

You May Like