நமது உடலில் ரத்தத்தை சுத்திகரித்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த சாப்பிடவேண்டிய உணவுகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்
நமது உடல் உறுப்புகளின் சீரான மற்றும் ஆரோக்கியமான இயக்கத்திற்கு ரத்தம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்த ரத்தம் சுத்தமாக இருப்பது மிகவும் முக்கியமானதாகும். ரத்தத்தில் சுத்தம் இல்லை என்றால், மனித உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. அந்த வகையில் நமது உடலில் ரத்தத்தை சுத்திகரித்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த மூன்று பொருட்களை சாப்பிடலாம்.
பீட்ரூட்டில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது. இது ரத்தத்தில் ரத்த அணுக்களை உற்பத்தி செய்வதுடன் ரத்தத்தில் உள்ள தேவையில்லாத அழுக்குகளை நீக்குகிறது. மேலும் அடிக்கடி பீட்ரூட் சாப்பிடுபவர்களுக்கு இரத்த பற்றாக்குறை ஏற்படாது. இதன் மூலம் உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு நமது உடலில் ஓடும் ரத்தமும் சுத்தமாக இருக்கும். மாதுளை பழத்தை சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் விரும்பி சாப்பிடுவது உண்டு. ரத்தம் குறைவாக உள்ளவர்களுக்கும், ரத்த சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்களுக்கு பெரும்பாலும் மருத்துவர்கள் அடிக்கடி சாப்பிட சொல்லும் பழங்களில் ஒன்று மாதுளை.இது நமது உடலில் ரத்தத்தை சுத்திகரிப்பதுடன் ரத்த சிவப்பணுக்களையும் அதிகரிக்க செய்கிறது. இதன் காரணமாக இரத்தத்தில் உள்ள அழுக்குகளை வெளியேறுகிறது. நமது உடலில் ரத்த ஓட்டத்தையும் சீராக்கி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
கீரைகளைப் பொறுத்தவரையில் பலவகையான கீரையில் உள்ளது. எல்லா கீரைகளிலும் ஏதாவது ஒரு வகை சத்துக்கள் காணப்படுகிறது. பொதுவாக கீரைகளை பொறுத்தவரையில், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகமாக காணப்படும்.எனவே அடிக்கடி உணவில் கீரை சேர்த்துக் கொள்ளும் போது, உணவில் ரத்த ஓட்டமும் சீராக காணப்படுகிறது. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, ரத்தம் சம்பந்தமான நோய்கள் நமது உடலில் ஏற்படாமல் நீண்ட நாட்கள் ஆரோக்கியத்துடன் வாழ உதவுகிறது.