fbpx

“ புடினுக்கு வேற வழியில்ல.. நிச்சயம் அணு ஆயுத போரை தொடங்குவார்..” அமெரிக்க அதிகாரி பகீர் தகவல்..

ரஷ்ய அதிபர் புடின் நிச்சயம் அணு ஆயுத போரை தொடங்குவார் என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்..

முன்னாள் மத்திய புலனாய்வு முகமை (CIA) அதிகாரியும், அமெரிக்க பாதுகாப்பு ஆய்வாளருமான ராபர்ட் பேர், புடின் போர் பதற்றத்தை குறைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று தெரிவித்துள்ளார். சிஎன் என் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர் “ விளாடிமிர் புடின் வெறுமனே இவ்வளவு நிலத்தை விட்டுக் கொடுக்க முடியாது, தோற்றுப் போகிறார், மேலும் ரஷ்யாவின் தலைவராக நீடிக்க முடியாது. அவர் ஒரு வலிமையான மனிதர், அவர் கடந்த 20 ஆண்டுகளாக தன்னை சித்தரித்துக்கொண்டார், அவர் கருத்து வேறுபாட்டிற்கு இடமளிக்கவில்லை, அவருக்கு வேறு வழியில்லை.. புடின் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அவர் எவ்வளவு சிக்கலில் இருக்கிறாரோ, அவ்வளவு அதிகமாக அவர் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தப் போகிறார்..” என்று தெரிவித்தார்..

கடந்த 7 மாதங்களாக ரஷ்யா – உக்ரைன் போர் நடைபெற்று வருகிறது..மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் ராணுவம் ரஷ்ய படைகளை எதிர்த்து வருகிறது.. இதனால் உக்ரைனை தன்வசப்படுத்தும் ரஷ்யாவின் எண்ணம் ஈடேறுவதில் சிக்கல் நீடிக்கிறது. எனினும் இலக்கை அடையும் வரை போர் தொடரும் என ரஷிய அதிபர் புதின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்..

அதை உறுதிப்படுத்தும் விதமாக உக்ரைன் மீதான போரை மேலும் தீவிரப்படுத்த 3 லட்சம் ரஷ்யர்களை அணி திரட்ட உள்ளதாக சமீபத்தில் அறிவித்தார். போருக்காக அணி திரட்டப்படுபவர்கள் யாரும் கட்டாயப்படுத்தப்பட மட்டார்கள் என்றும், ஆயுதப்படைகளில் பணியாற்றியவர்கள், பொருத்தமான அனுபவம் உள்ளவர்கள் அழைக்கப்படுவார்கள் என்றும் ரஷ்ய ராணுவ மந்திரி செர்ஜி ஷோய்கு கூறினார். எனினும் போருக்கு அணி திரட்டும் புதினின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்ய மக்களே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. மேலும் போரில் கண்டுகொள்ள விரும்பாத ரஷ்யர்கள் பலர் சாலை மார்க்கமாக அண்டை நாடுகளுக்கு செல்ல தொடங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Maha

Next Post

கூடுதலாக 100 ரூபாய் கூலி பெற்றதால் மாடியில் இருந்து தள்ளி கொலை செய்த நண்பர்கள் கைது…

Tue Sep 27 , 2022
கூடுதலாக 100 ரூபாய் கூலி பெற்றதால் சக நண்பர்கள் ஆத்திரத்தில் 3-வது மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டு கட்டிடத் தொழிலாளியை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேளச்சேரி, தண்டீஸ்வரன் நகர் 10வது தெருவில் அடுக்குமாடி குடியிருப்புக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதில் திருவண்ணாமலையைச் சேர்ந்த 22 வயது ஆனந்தன் என்பவர் கட்டிட வேலை செய்து வந்தார். அதே ஊரைச் சேர்ந்த சக்திவேல், பிரசாந்த் , […]

You May Like