அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது;- ரஷிய அதிபர் புதினின் பொறுப்பற்ற பேச்சு மற்றும் அச்சுறுத்தல்களால் அமெரிக்காவும் அதை சார்ந்த நட்பு நாடுகளும் பயப்படப் போவதில்லை. புதினின் செயல்பாடுகள் அவர் போராடிக் கொண்டிருக்கிறார் என்பதன் அறிகுறியாகும்.
அவரால் அண்டை நாட்டின் நிலப்பரப்பைக் கைப்பற்றி அந்த தவறில் இருந்து தப்பிக்க முடியாது. உக்ரைனுக்கு தொடர்ந்து நாங்கள் ராணுவ தளவாடங்களை வழங்குவோம். “நேட்டோ பிராந்தியத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் பாதுகாக்க அமெரிக்கா எங்கள் நேட்டோ நட்பு நாடுகளுடன் இணைந்து முழுமையாக தயாராக இருக்கிறது.
எனவே மிஸ்டர் புதின், நான் சொல்வதை நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம். நான் எங்கள் நட்பு நாடுகளுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறேன். இன்றும் புதிய தடைகளை அறிவிக்கிறோம் என்றார்.