தயாரிப்பாளர் கே.ராஜன், சமீபத்தில் இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அதில், சினிமாவில் விபச்சாரம் இருப்பதாக கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ சினிமாவில் விபச்சாரம் இருக்கிறது. அது திரைத்துறையில் ஒரு பக்கமாக இருக்கிறது. பல சமயங்களில் விபச்சாரிகள், சினிமாவை சேர்ந்தவர்களாக இருக்கலாம். நடிகைகளின் நடிப்பை யார் பார்த்தா? கவர்ச்சியான விஷயத்திற்கு தான் அவர்களை பயன்படுத்துகிறார்கள்.
கவர்ச்சி என்பது உடம்பை கட்டுவது தான். இளம் வயதிலேயே கவர்ச்சி காட்டினால், அதற்கான காசை அவர்கள் பெற்றுக்கொள்வார்கள். கர்ப்புடன் அவர்கள் இருப்பது சுலபமானது கிடையாது. நடிகைகள் அறிமுகமாகும் போது மேக் அப் போட இருக்கும் மேக்கப் மேனே காலி செய்துவிடுவான். மேக்கப் மேனிடம் சென்ற உடனே உன் உடம்பு முழுசா பார்க்கணும், அப்போ தான் என்ன உடை மற்றும் மேக் அப் போடுவது என பார்க்க முடியும் என்று கூறுவார்கள்.
இது எல்லாமே சினிமா துறையில் இருக்கும் விஷயம். இருக்கும் கொஞ்ச காலத்தில் சம்பாதிக்க வேண்டியதைச் சம்பாதித்துவிட்டுச் சென்று விட வேண்டும்“ என்றார் கே.ராஜன். இவரின் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.