fbpx

அபாய கட்டத்தில் புழல் ஏரி..!! சுற்றுச்சுவர் பகுதி இடிந்து விழுந்ததால் சாலையில் வெள்ளப்பெருக்கு..?

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரி 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டதாகும். மிக்ஜாம் புயல் காரணமாக இரு தினங்களாக சென்னை மற்றும் திருவள்ளூரில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் புழல் ஏரியின் நீர்வரத்து அதிகரிக்க துவங்கியது. இதன் காரணமாக புழல் ஏரியிலிருந்து முதலில் 500 கன அடி திறக்கப்பட்டு பிறகு படிப்படியாக உயர்த்தப்பட்டு நேற்று இரவு 5,500 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இருப்பினும் மழையின் அளவு சென்னை, திருவள்ளூரில் அதிகமாக காணப்பட்டதால் ஏரிக்கு நீர்வரத்து சுமார் 10,000 கனஅடியாக உயர்ந்துள்ளது.

இதனால் ஏரியின் முழு கொள்ளளவு எட்டியதால் கரையின் சுவர்கள் மேல் இருந்து தண்ணீர் வெளியேற தொடங்கியது. இதனால் ஏரியின் சுற்று சுவர் பகுதியில் மண்ணரிப்பு ஏற்பட்டு சேதம் அடைந்தது. ஏரியின் சுற்றுச் சுவரின் ஒரு பகுதி நேற்றிரவு கீழே சரிந்து விழுந்தது. இதில் இருந்து தண்ணீர் வெளியே வர தொடங்கியது. மேலும் அருகில் உள்ள சாலையில் தண்ணீர் சென்றதால் தார் சாலைகள் முழுவதுமாக விரிசல் ஏற்பட்டது. இதுதொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Chella

Next Post

மிரட்டிய புயல்..!! பிக்பாஸ் வீட்டின் நிலைமை என்ன..? போட்டியாளர்கள் எங்கு இருக்கிறார்கள்..?

Tue Dec 5 , 2023
மிக்ஜாம் புயலால் சென்னையில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் நிலை எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். சென்னையில் மிக்ஜாம் புயல் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையின் ஒவ்வொரு பகுதியிலும் மின்சாரம் படிப்படியாக கொடுக்கப்பட்டு வரக்கூடிய நிலையில், மழைநீர் வடிந்து செல்வதற்கான பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் இந்த புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்களா? அவர்களது நிலை என்ன? […]

You May Like