கியூ ஆர் ஸ்கேன் முறைப்படி ஸ்கேன் செய்து வாட்ஸ் அப் சாட் தகவல்களை முழுமையாக மற்றொரு போனிற்கு மாற்றம் செய்யும் புதிய qr கோடு சார்ட் ட்ரான்ஸ்பர் என்ற புதிய அம்சம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக அளவில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் மெசஞ்சர் செயலிகளில் வாட்ஸ் அப் முன்னிலையில் இருந்து வருகிறது. செய்திகளை பரிமாறிக் கொள்வதுடன், புகைப்படங்கள் வீடியோக்கள் ஆகியவற்றையும் பகிர்ந்து கொள்ள பெரும்பாலான மக்கள் வாட்ஸ் அப்பை தான் முதன்மை தகவல் தொடர்பு செயலியாக பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ் அப் நிறுவனமும் தனது யூசர்களை திருப்திப்படுத்த அவ்வபோது புதிய புதிய அப்டேட்டுகளை அளித்து வருகிறது. அதன்படி தற்போது வாட்ஸ் அப்பில் புதிய அம்சம் வெளியிடப்பட உள்ளது. இதன் மூலமாக உங்கள் whatsapp சாட்டை இனி எளிமையாக கியூ ஆர் ஸ்கேன் மூலம் வேறொரு போன் இருக்கு மாற்ற முடியும். வாட்ஸ் அப் பயனர்களின் சாட் அனைத்தும் கூகுள் டிரைவில் பேக்கப் செய்யப்பட்டு சேமிக்கப்படுகின்றது.
இதனை மற்ற போனிற்கு மாற்ற பயனர்கள் அவர்களின் whatsapp கணக்குடன் இணைக்கப்பட்ட கூகுள் டிரைவ் கணக்கை இணைக்க வேண்டும். இதற்கு தற்போது எளிமையான அப்டேட் வெளியிடப்பட உள்ளது. அதாவது கியூ ஆர் ஸ்கேன் முறைப்படி ஸ்கேன் செய்து வாட்ஸ் அப் சாட் தகவல்களை முழுமையாக மற்றொரு போனிற்கு மாற்றம் செய்யும் புதிய qr கோடு சார்ட் ட்ரான்ஸ்பர் என்ற புதிய அம்சம் விரைவில் whatsapp பயனர்களுக்கு கிடைக்கும். இந்த புதிய அம்சம் செயல்பட்டால் கூகுள் டிரைவ் பேக்கப் மூலம் சாட்களை மாற்றம் செய்யும் வேலை மிகவும் எளிதாகும்.