fbpx

காலாண்டு தேர்வு..!! 15 நாட்கள் விடுமுறையா..? பள்ளி மாணவர்களுக்கு செம குட் நியூஸ்..!!

தமிழ்நாடு பாடத்திட்டத்தில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான பள்ளி வேலைநாட்கள், தேர்வுகள், விடுமுறை உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய கல்வியாண்டு நாட்காட்டி 2018ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகிறது. அந்தவகையில், நடப்பு கல்வியாண்டுக்கான (2023-24) நாட்காட்டியை பள்ளிக்கல்வித்துறை கடந்த ஏப்.28ஆம் தேதி வெளியிட்டது.

அதில், 11ஆம் வகுப்பு காலை 9.30 முதல் மதியம் 12.45 மணி வரையும், 12ஆம் வகுப்புக்கு மதியம் 1.15 முதல் மாலை 4.30 மணி வரையும் தேர்வு நடைபெறும். ஆறு முதல் பத்தாம் வகுப்புகளுக்கு செப்.19ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் 6, 7, 8ஆம் வகுப்புகளுக்கு காலை 10 முதல் மதியம் 2.30 மணி வரையும், 9, 10ஆம் வகுப்புகளுக்கு மதியம் 2 முதல் மாலை 4.30 மணி வரையும் தேர்வு நடைபெறும்.

6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உடற்கல்வி தேர்வு செப்.22ஆம் தேதி நடைபெறவுள்ளது. செப்.28 முதல் அக்.2ஆம் தேதி வரை மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை வழங்கப்படும் என்றும் அக்டோபர் 3ஆம் தேதி வழக்கம்போல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 28ஆம் தேதி மிலாடி என்பதால் அரசு விடுமுறையாகும். செப்டம்பர் 30, அக்டோபர் 1 ஆகியவை சனி, ஞாயிறு என வார இறுதி நாட்களாக வருகிறது. அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அரசு விடுமுறையாகும். அக்டோபர் 3ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. 29ஆம் தேதி ஒரே ஒரு நாள் மட்டுமே காலாண்டு விடுமுறை எனக் கூறும் வகையில் அமைந்துள்ளது. 

இதுமட்டுமல்லாமல் செப்டம்பர் மாதத்தில் ஆசிரியர் தினம், விநாயகர் சதுர்த்தி, சனி, ஞாயிறு உள்ளிட்ட விடுமுறைகள் வருவதால் 1 முதல் 3ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 15 நாட்களும், மற்ற மாணவர்களுக்கு 10 நாட்கள் வரையும் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது.

Chella

Next Post

உங்களுடைய குழந்தை புத்திசாலி குழந்தையாக வளர வேண்டுமா….? அப்படி என்றால், இதை கடை பிடியுங்கள்…..!

Thu Aug 31 , 2023
ஒரு குழந்தையானது, சிறு வயதிலிருந்து பல்வேறு காய்கறிகளை சாப்பிட்டு வளர்ந்தால், அந்த குழந்தையின் மூளைத்திறன் நன்றாக இருக்கும் என்றும், ஞாபக சக்தி அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. ஆகவே தான், குழந்தைகளுக்கு பல்வேறு ஊட்டச்சத்து கிடைக்கும் பொருட்களை வாங்கி, அதனை சாப்பிட வைத்து, அவர்களை வளர்கிறார்கள் பெற்றோர்கள். அந்த வகையில், இன்று எந்தெந்த காய்கறிகளை கொடுத்து வளர்த்தால், ஒரு குழந்தை புத்திசாலியாக வளரும் என்பது பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம். குழந்தைகளுக்கு […]

You May Like