fbpx

ராணியின் உடல் லண்டன் கொண்டு வரப்பட்டது… பால்மொரல் கோட்டையில் இருந்து எடின்பர்க் கோட்டைக்கு எடுத்துவரப்பட்டது …….

ஸ்காட்லாந்தின் பால்மொரல் கோட்டையில் இருந்து எடின்பர்க் கோட்டைக்கு 2-ம் ராணி எலிசபெத் உடல் அஞ்சலிக்காக எடுத்து வரப்படுகின்றது.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால் செப்டம்பர் 8-ம் தேதி காலமானார். ஸ்காட்லாந்து பால்மோரல் கோட்டையில் உயிர் பிரிந்ததால்  அவரது உடல் லண்டனுக்கு கொண்டுவரப்பட உள்ளது. முதலில் வாகனம் மூலம் ஸ்காட்லாந்து தலைநகரின் எடின்பர்க்கில் உள்ள ஹோலிரூட் கோட்டைக்கு எடுத்து வரப்பட்டது.

இதற்கிடையே வழி நெடுகிலும் மக்கள் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டதை அடுத்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள். ஹோலிரூட் ஹவுசில் இருந்து செயின்ட் கில்ஸ் தேவாலயத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது. அங்கு ராணியின் உடலுக்கு மக்கள் அஞ்சலி செலுத்தப்படும். பின்னர் 13-ந்தேதி பிற்பகல் அளவில் ராணியின் உடல் விமானப்படை விமானம் எடுத்துச் செல்லப்பட்டு நார்த்டோல் விமான தளத்திற்கு கொண்டு செல்லப்படும்.

அங்கிருந்து ராணியின் உடல் 14-ம் தேதி மாலை நேரத்தில் லண்டன் பக்கிங்காம் அரண்மனைக்கு கொண்டுசெல்லப்படுகின்றது. அங்குள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கில் லண்டன் மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக 4 நாட்கள் வைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. உடல் கொண்டு செல்லப்படம் இந்நிகழ்விற்கு ’’ஆபரேஷன் யூனிகார்ன் ’’ என பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னர் ராணியின் உடல் ஊர்வலமாக அபேவுக்கு கொண்டு செல்லப்பட்டு 19ம் தேதி காலை அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெறும். ராணியின் கணவர் உடல் உள்ள பிலிப் கல்லறைக்கு அருகே அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என பக்கிங்காம் அரண்மனை தகவல் வெளியிட்டுள்ளது.

Next Post

விலங்குகளிடம் அன்புகாட்டிய 2-ம் ராணி எலிசபெத் …..30க்கும் மேற்பட்ட நாய்கள் வளர்த்தாராம்…..

Sun Sep 11 , 2022
விலங்குகள் மீது அன்பு கொண்டவரான 2-ம் ராணி எலிசபெத் தனது வாழ்நாள் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட நாய்கள் வளர்த்தாராம்…. ராணி எலிசபெத் தனது 18வது பிறந்த நாளின் போது கார்கி இன நாய் வாங்கி வளர்க்கத் தொடங்கினார். பின்னர் ஒவ்வொரு ஆண்டும் தனக்கு பிடித்தமான நாயை அவர் வாங்கி வளர்க்கத் தொடங்கினாராம். அவைகள் , மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தாராம். அது மட்டுமின்றி பிற விலங்குகள் மீதும் அவர் […]

You May Like