தாளவாடி அருகே காதல் திருமணம் செய்ததால் மருமகன் மீது மிளகாய் பொடி தூவி கத்தியால் குத்திய மாமனார் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தாளவாடி அருகே திகினரை கிராமத்தில் விக்னேஷ் என்கிற இளைஞர், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த பால்ராஜ் என்பவருடைய மகள் ஜோதியை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், தன் மகளை காதல் திருமணம் செய்த மருமகன் மீது ஆத்திரம் அடைந்த மாமனார் பால்ராஜ், கடந்த 2 நாட்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து சொந்த ஊருக்கு வந்த விக்னேஷ், வீட்டில் தனியாக இருந்தபோது தனது மனைவி துளசியம்மா, மகன் மைனர் ராகுல் ஆகியோருடன் சென்று மிளகாய் பொடி தூவி, கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
ஆபத்தான நிலையில், இருந்த விக்னேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், தப்பியோடிய மூன்று பேரை தாளவாடி காவல்துறையினர் இரண்டு
தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இவர்கள் பால்ராஜ் உறவினரின் தோட்டத்தில் இருப்பது தெரிந்து, மூன்று பேரையும் தாளவாடி காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.