fbpx

டீ போட்டு கொடுக்காததால் ஆத்திரம்..!! மருமகளை கழுத்தை நெரித்துக் கொன்ற மாமியார்..!! அதிர்ச்சி சம்பவம்..!!

டீ போட்டு கொடுக்காத ஆத்திரத்தில் மருமகளை மாமியார் கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் ஹாசன் நகரை சேர்ந்தவர் அஜ்மீரா பேகம் (28). இவருக்கும் ஆட்டோ ஓட்டுநரான முகமது அப்பாஸ்க்கும் கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 6 வயதில் மகளும், 8 வயதில் மகனும் உள்ளனர். இவர்களுடன் அப்பாஸின் தாய் ஃபர்சானா பேகம் (53) வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 15 நாட்களாக மாமியார் மற்றும் மருமகள் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்த நிலையில், அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், தனது மருமகள் அஜ்மீரா பேகத்திடம் டீ போட்டு தரும்படி மாமியார் கூறியுள்ளார். ஆனால், டீ எல்லாம் போட்டு தர முடியாது என மருமகள் தெரிவித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில், ஆத்திரமடைந்த மாமியார் ஃபர்சானா தனது மருமகள் என்று கூட பாராமல் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மருமகள் அஜ்மீரா பேகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உஸ்மானியா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவம் தொடர்பாக மாமியார் ஃபர்சானா பேகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருமகளை மாமியார் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read More : பட்டாசு ஆலையில் வெடிவிபத்து..!! 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழப்பு..!! சாத்தூரில் அதிர்ச்சி..!!

English Summary

The incident of mother-in-law strangling her daughter-in-law in anger for not giving her tea has caused a shock.

Chella

Next Post

”இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை இதுதான்”..!! முதல்வரை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை..!!

Sat Jun 29 , 2024
Annamalai criticized Tamil Nadu Prohibition Amendment Act as the best joke of the year.

You May Like