fbpx

ராகிங் கொடுமை..!! 2-வது மாடியிலிருந்து குதித்த பல்கலைக்கழக மாணவன்..!! அதிர்ச்சி சம்பவம்..!!

ராகிங் கொடுமையால் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் 2-வது மாடியில் இருந்து குதித்த தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலம் திப்ரூகார் என்ற பகுதியில் திப்ரூகார் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்வேறு மாணவ மாணவிகள் படித்து வரும் இந்த பல்கலைக்கழகத்தில், விடுதி வசதியும் உள்ளது. அவ்வாறு பொருளாதாரம் பிரிவை சேர்ந்த ஆனந்த ஷர்மா என்ற மாணவர் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில், இவரை அங்குள்ள சீனியர் மாணவர்கள் அடிக்கடி ராகிங் செய்துள்ளனர். மேலும், இது தொடர்கதையாய் இருந்ததால் மனமுடைந்த மாணவர் பல்கலைக்கழக விடுதியின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்துள்ளார். இதையடுத்து மாணவரை மீட்டு அருகிலிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.

ராகிங் கொடுமை..!! 2-வது மாடியிலிருந்து குதித்த பல்கலைக்கழக மாணவன்..!! அதிர்ச்சி சம்பவம்..!!

இந்த சம்பவம் குறித்து மாணவரின் பெற்றோருக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில், அவர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். மேலும், குதித்த மாணவருடன் சேர்ந்து 2 மாணவர்களும் ராகிங் செய்யப்பட்டனர். இதையடுத்து அவர்களும் இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், குற்றம்சாட்டப்பட்டவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் முன்னாள் மாணவர் என்றும், அவர் இன்னும் அந்த விடுதியில் தங்கியிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் காவல்துறை அவரை கைது செய்யவில்லை.

ராகிங் கொடுமை..!! 2-வது மாடியிலிருந்து குதித்த பல்கலைக்கழக மாணவன்..!! அதிர்ச்சி சம்பவம்..!!

தற்போது மாணவர் ஆனந்த் ஷர்மா உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார். பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக இந்த மாணவர் விடுதி வார்டேனிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!! சம்பள உயர்வு குறித்து வெளியான ஹேப்பி நியூஸ்..!!

Mon Nov 28 , 2022
மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் மிகப் பெரிய தொகையானது ஊதியமாக கிடைக்கப் போகிறது. அதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான பிட்மென்ட் பேக்டர் காரணி விரைவில் உயர அதிகமான வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நீண்ட தினங்களாக அரசு ஊழியர்கள் பிட்மென்ட் பேக்டரை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். அவர்களது கோரிக்கை பிட்மென்ட் பேக்டரை 2.57 மடங்கில் இருந்து 3.68 மடங்காக அதிகரிக்க வேண்டும் என்பதுதான். அரசு […]

You May Like