fbpx

கல்லூரிகளில் ராகிங் கொடுமை..!! இன்னும் ஒரே வாரம் தான் டைம்..!! வெளியான முக்கிய உத்தரவு..!!

கல்லூரிகளிடம் இருந்து ராகிங் குறித்த அறிக்கை ஒரு வாரத்துக்குள் அனுப்ப வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர் ஒருவரை ராகிங் செய்த சீனியர் மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கல்லூரிகளில் ராகிங் தடுப்பு குழு கட்டாயம் அமைக்க வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்குநர் கீதா சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இதுதொடர்பான சுற்றறிக்கையில், ”கல்லூரி மாணவர்களிடையே ராகிங் நடக்காதபடி ஏற்கனவே உச்சநீதிமன்றம் வழிகாட்டு நெறிமுறைகளில் கூறியுள்ளவற்றை கருத்தில் கொண்டு செயல்பட அறிவுறுத்தப்பட்டது. தற்போது நடப்பு கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும் சுயநிதி கல்லூரி முதல்வர்கள் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். அதன்படி, ராகிங் நடைபெறுவதற்கு முன்பே எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்லூரிகளில் ராகிங் தடுப்பு குழு அமைத்தல் வேண்டும், ராகிங் பற்றி உடனடியாக புகார் செய்ய வேண்டிய ஆசிரியர்களின் பெயர், முகவரி, செல்போன் எண்கள் அறிவிப்பு பலகையில் வைக்க வேண்டும். ராகிங் புகார் பெட்டி, ஆலோசனை பெட்டியை அமைத்து ராகிங் கொடுமையை ஒழிக்க முன்னேற்பாடுகளை கல்லூரி முதல்வரும், துறை தலைவர்களும் கூடி ஆலோசித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

ரேஷன் கார்டில் இருந்து உங்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளதா..? இனி கவலை வேண்டாம்..!! நீங்களே இதை பண்ணலாம்..!!

Thu Nov 9 , 2023
தமிழ்நாட்டில் ரேஷன் பொருட்களை பெறுவதற்கும் அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கும் ரேஷன் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. குடும்ப உறுப்பினர் எண்ணிக்கையை பொறுத்து ஒவ்வொரு மாதமும் ரேஷன் கடைகள் மூலமாக உணவுப்பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், எதிர்பாராத விதமாக ரேஷன் அட்டையில் இருந்து குடும்ப நபரின் பெயர் நீக்கம் செய்து விட்டது தெரிய வந்தால் அதனை எவ்வாறு உறுதி செய்வது என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

You May Like