fbpx

மரண அடி அடித்த ரஹானே!… கொல்கத்தா பந்துவீச்சை துவம்சம் செய்த சிங்கங்கள்!… சிஎஸ்கே அபார வெற்றி!

ரஹானேவின் மரண அடி ஆட்டத்தால் கொல்கத்தா அணியை வீழ்த்தி 49 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் 16வது சீசனின் 33வது லீக் போட்டியில் தல தோனி தலைமையிலான சென்னை அணியும், நிதீஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி, பவுளிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி தொடக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் கெய்க்வாட்- கான்வே ஜோடி அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்கத் தொடங்கினர். ருதுராஜ் கெய்க்வாட் 20 பந்துகளில் 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வெளியேறினார். டெவான் கான்வே 40 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய ரஹானே – துபே ஜோடியும் கொல்கத்தா வீரர்களின் பந்துகளை நான்கு பக்கமும் சிதறடித்தனர். ரஹானே 29 பந்துகளில் 71 ரன்களும், துபே 21 பந்துகளில் 50 ரன்களும் விளாசினர். இறுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 235 ரன்கள் குவித்தது. நடப்பு ஐபிஎல் தொடரில், ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதையடுத்து 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஜேசன் ராய் 26 பந்துகளில் 61 ரன்களும், ரிங்கு சிங் 33 பந்துகளில் 53 ரன்களும் விளாசினர். இருப்பினும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 49 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது.

Kokila

Next Post

ஆசையாக மனைவிக்கு டிராக்டர் ஓட்ட கற்றுத்தந்த கணவர்!... டிராக்டர் கவிழ்ந்து இருவரும் உயிரிழப்பு!... ராசிபுரத்தில் சோகம்!

Mon Apr 24 , 2023
ராசிபுரம் அருகே மனைவிக்கு டிராக்டர ஓட்ட பயிற்சி அளித்தபோது, டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் கணவன், மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் குருவாளா பகுதியில் வசித்து வருபவர் சிவகுமார். இவருடைய மனைவி கீதா. இவர்கள் இருவருமே அப்பகுதியில் விவசாயம் செய்து வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் தங்கள் வயலில் பல்வேறு பயிர்களையும் பயிர் செய்து விளைவித்து வந்தனர். அதற்காக நிலத்தை உழவு செய்யும் வேலைகளை […]

You May Like