fbpx

“பரோட்டா சாப்பிடுவதற்கு ஒரு எம்.பி”! – ராகுல் காந்தி குறித்து கேரள ‘BJP’ விமர்சனம்.!

வயநாடு தொகுதிக்கு ராகுல் காந்தி பரோட்டா சாப்பிட மட்டுமே வருவதாக கேரள மாநில ‘BJP’ கட்சியின் தலைவர் சுரேந்திரன் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருக்கிறார். 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில் தங்களது எதிர்க்கட்சி தலைவர்களை விமர்சனம் செய்தும் வருகின்றனர் . இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் கேரள மாநில தலைவரான ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.

காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி தற்போது பாரத் ஜோதா யாத்திரை என்ற பெயரில் மக்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காகவும் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் நடைபெற்று வரும் அநீதியை மக்களிடம் எடுத்துக் கூறவும் இந்தியா முழுவதும் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். தற்போது இவரது யாத்திரை உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. அங்கு தனது பயணத்தின் போது ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு பொதுமக்கள் அழைக்கப்படாதது குறித்து விமர்சனத்தை முன் வைத்திருந்தார் ராகுல் காந்தி.

இந்நிலையில் கேரள மாநில பாஜக தலைவர் ராகுல் காந்தி மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார். இது குறித்து பேசிய சுரேந்திரன் ராகுல் காந்தி தனது தொகுதியான வயநாட்டிற்கு பரோட்டா சாப்பிட மட்டுமே வருவதாக தெரிவித்திருக்கிறார். ராகுல் காந்தியால் வயநாடு தொகுதிக்கு எந்தவித பயனும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும் பரோட்டா சாப்பிடுவதற்காக கேரள மக்கள் ராகுல் காந்தியை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இது போன்ற ஒரு எம் பி யை சுமக்க கேரள மக்கள் தயாராகி விட்டார்களா.? எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறார் சுரேந்திரன். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு மற்றும் உத்திர பிரதேசத்தின் அமேதி தொகுதிகளில் போட்டியிட்டார் . அமேதியில் தோல்வி அடைந்த அவர் வயநாட்டில் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினர் ஆனார் . ராகுல் காந்தி தனது தொகுதிக்கு வருகை புரியும் போதெல்லாம் பரோட்டா சாப்பிடுவதை பாரதிய ஜனதா கட்சியின் கேரளா தலைவர் தற்போது விமர்சனம் செய்திருக்கிறார்.

English Summary: Rahul Gandhi visits wayanad only to eat parotta. Apart from this there is no use of him for his constituency.

Read More: 4 கோடி ரூபாய் சைபர் மோசடி வழக்கில் பெண் கைது.! போலீசாரின் கண்களில் மண்ணைத் தூவி, தப்பி ஓட்டம்.!

Next Post

Annamalai BJP | மக்களவை தேர்தலில் 400 இடங்களை கைப்பற்றும் பாஜக..!! அடித்து சொல்லும் அண்ணாமலை..!!

Wed Feb 21 , 2024
மக்களவை தேர்தலில் இந்தியா முழுவதும் பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். Annamalai BJP | மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் `என் மண் என் மக்கள்’ யாத்திரையை கடந்த ஆண்டு ஜூலை 28ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா ராமேசுவரத்தில் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அண்ணாமலை பல இடங்களில் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, நேற்று […]

You May Like