fbpx

வயநாட்டில் நிலச்சரிவு பகுதிகளை பார்வையிடும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி..!! தற்போதைய நிலவரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்பு..!!

வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் பார்வையிட்டு வருகின்றனர்.

டெல்லியில் இருந்து கண்ணூர் விமான நிலையத்துக்கு இன்று காலை 10.30 மணியளவில் வருகை தந்த இருவரும், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு கார் மூலம் சென்றடைந்தனர். முதற்கட்டமாக சூரல்மலை பகுதிகளில் மீட்புப் பணிகளை பார்வையிட்டுட்டனர். அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகளிடம் நிலைமையை கேட்டறிந்தனர். இவர்களுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபாலும் சென்றுள்ளார்.

வயநாட்டில் தொடா்மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 280-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து, ராகுல், பிரியங்கா ஆகியோா் புதன்கிழமை அங்கு பயணம் மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுவாா்கள் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், வயநாட்டில் தொடா்ந்து நிலவும் மோசமான வானிலை காரணமாக அவா்களின் பயணம் ஒத்திவைக்கப்பட்டது. மாநில முதல்வர் பிரனாயி விஜயனும் மீட்புப் படையினர் தவிர வேறு யாரும் வயநாடு வர வேண்டாம் என கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்நிலையில், இருவரும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளுக்கு இன்று நேரில் சென்று பார்வையிட்டு வருகின்றனர். தொடர்ந்து, நிலச்சரிவால் குடும்பங்களை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களை சந்தித்து ஆறுதல் கூறுகின்றனர். கடந்த மக்களவைத் தோ்தலில் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி, கேரளத்தில் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற ராகுல் காந்தி, வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தாா். அங்கு இடைத்தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் பிரியங்கா போட்டியிடுவாா் என்று அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Read More : ’தமிழ்நாட்டில் 2 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்’..!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

English Summary

Leader of Opposition in Lok Sabha Rahul Gandhi and Congress General Secretary Priyanka Gandhi are visiting the landslide affected areas in Wayanad.

Chella

Next Post

HDFC வாடிக்கையாளரா நீங்கள்? ரூல்ஸ் எல்லாம் மாறிடுச்சு..!! இத தெரிஞ்சுக்கோங்க..

Thu Aug 1 , 2024
HDFC Bank New Rules: Big update for customers, these rules have changed from August 1

You May Like