fbpx

நடைபயணத்தை பாதியில் நிறுத்தும் ராகுல் காந்தி..? நாளை மறுநாள் டெல்லி பயணம்..?

இந்திய ஒற்றுமை பயணத்தின் 14-வது நாள் பயணத்தை இன்று கொச்சியில் துவங்கியுள்ள ராகுல் காந்தி நாளை மறுதினம் (செப்.23) டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் சனிக்கிழமை துவங்க உள்ள நிலையில், இதற்கான முறையான அறிவிப்பு நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தலைவர் பதவிக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் சஷிதரூர் எம்.பி. ஆகியோர் போட்டியிடக்கூடும் என்று கூறப்படும் நிலையில், தலைவர் பதவிக்கு போட்டியிட ராகுல் காந்தியை வலியுறுத்தப்போவதாக அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

நடைபயணத்தை பாதியில் நிறுத்தும் ராகுல் காந்தி..? நாளை மறுநாள் டெல்லி பயணம்..?

இதுகுறித்து ராகுல் காந்தியுடன் விவாதிப்பதற்காக அசோக் கெலாட் இன்று அல்லது நாளை கேரளா செல்வார் என்று முன்னதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், செப்டம்பர் 23ஆம் தேதி ஒருநாள் நடைப்பயணத்திற்கு ஓய்வு கொடுத்துவிட்டு ராகுல் காந்தி டெல்லி செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. தலைவர் தேர்தல் குறித்து முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ள ராகுல் காந்தி, இந்த ஆலோசனைக்குப் பின் தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவெடுப்பார் என்று தெரிகிறது. ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக பதவியேற்க வேண்டுமென்று தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

நற்செய்தி.. தங்கம் விலை மீண்டும் குறைவு.. இன்றைய நிலவரம் என்ன..?

Wed Sep 21 , 2022
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.36,960-க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்நிலையில் தங்கம் விலை […]
gold

You May Like