fbpx

ராகுல் காந்தியின் நடைபயணம் இன்றுடன் நிறைவு..!! மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு..!!

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் இன்றுடன் நிறைவடைகிறது.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ராகுல் காந்தியில் `இந்திய ஒற்றுமை யாத்திரை, கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி 3,970 கி.மீ. 12 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களை சுமார் 145 நாட்களில் கடந்து இன்று (ஜன.30) ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் முடிவடைகிறது. பல கட்சிகளின் தலைவர்கள் இதன் நிறைவு விழாவில் கலந்துகொள்ள உள்ளனர். அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையிலான திமுக, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம், நிதிஷ் குமாரின் ஜனதா தளம், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, சிபிஐ (எம்), சி.பி.ஐ, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கேரள காங்கிரஸ், பரூக் அப்துல்லா தலைமையிலான ஜம்மு & காஷ்மீர் தேசிய மாநாடு, மெஹபூபா முப்தியின் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் ஷிபு சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகள் விழாவில் கலந்து கொள்ள இருக்கின்றன. அதேநேரம் இவ்விழாவை திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி மற்றும் தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் விழாவை புறக்கணித்துள்ளன.

ராகுல் காந்தியின் நடைபயணம் இன்றுடன் நிறைவு..!! மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு..!!

இந்த நிறைவு விழாவை முன்னிட்டு பாதுகாப்பு வழங்கக் கோரி மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் ‘ஜனவரி 30 ஆம் தேதி ஸ்ரீநகரில் நடைபெறும் விழாவில் அதிகம் பேர் கலந்து கொள்வார்கள். பல மூத்த காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பிற முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அந்த நிகழ்வில் கலந்து கொள்கிறார்கள். எனவே, இந்த விழாவின் பாதுகாப்பு விவகாரத்தில் நீங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட்டு, ஸ்ரீநகரில் நடைபெறும் யாத்திரை உட்பட விழா முடிவடையும் வரை உரிய பாதுகாப்பை வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

Gold Rate..!! நகை பிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்..!! கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை..!!

Mon Jan 30 , 2023
தமிழகத்தை பொறுத்தவரை நடுத்தர மக்களின் மிகப்பெரிய சேமிப்பாகவும், முதலீடாகவும் இருந்து வருவது தங்கம் தான். இல்லத்தரசிகள் தொடங்கி முதலீட்டாளர்கள் வரை தங்கத்தில் அதிக முதலீடு செய்து வருகின்றனர். எங்கெங்கோ வீடு, மனை, சென்னைக்கு மிக அருகில் என திருச்சி வரை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்பவர்களும் தங்கத்தில் ஒரு பகுதியை முதலீடு செய்துள்ளனர். தங்கத்தை பொறுத்தவரை விலை ஏறினாலும், இறங்கினாலும் அதற்கான மவுசே தனிதான். சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை […]

You May Like