fbpx

ராகுல், அண்ணாமலை பாணியில் விஜய்..!! முதல் மாநாடு எங்கு தெரியுமா..? நடைபயணம் வேற இருக்காம்..!!

நடிகர் விஜய் ”தமிழக வெற்றிக் கழகம்” என்ற கட்சியை ஆரம்பித்து அரசியலுக்குள் நுழைந்துள்ளர். மேலும், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு வழிவகுப்பதுதான் தனது கட்சியின் இலக்கு என்றும் விஜய் கூறியுள்ளார். சமீபத்தில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாம் ஆண்டு ‘கல்வி விருது விழா’ சென்னையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பேசிய விஜய், நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது. நீட் தேர்வால் கிராமப்புற ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றால்லாம் பேசியிருந்தார். இதற்கு பல அரசியல் கட்சியினர் வரவேற்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தான், முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

விஜய், அடுத்தடுத்து அரசியல் ரீதியாக காய்களை நகர்த்தி வரும் நிலையில், முதல் அரசியல் மாநில மாநாட்டை திருச்சியில் செப்டம்பர் அல்லது நவம்பரில் நடத்தவும், ஒரு மாநில மாநாடு, 4 மண்டல மாநாடு, 10 மாவட்டங்களில் பொதுக்கூட்டங்களை நடத்தவும் திட்டமிட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மக்களை சந்திக்கும் வகையில், 100 சட்டமன்ற தொகுதிகளில் நடைபயணம் செல்லவும் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Read More : அதிர்ச்சி..!! வீட்டில் துர்நாற்றம்..!! கதவை திறந்த போலீஸ்..!! எரிந்த நிலையில் 3 உடல்கள்..!! கொலையின் பின்னணி என்ன..?

English Summary

Vijay is planning to hold the first political state conference in Trichy in September or November as he moves the pieces politically.

Chella

Next Post

கோபா அமெரிக்கா : 16வது முறையாக ஆா்ஜென்டீனா சாம்பியன்!

Mon Jul 15 , 2024
Lionel Messi was forced off in the second half due to injury but Lautaro Martinez helped Argentina clinch an often chaotic Copa America final

You May Like