fbpx

போதைப் பொருட்களின் மையமாக உள்ளது குஜராத் …..குஜராத்தில் ராகுல் காந்தி சாடல் …

போதைப்பொருட்களின் மையமாக குஜராத் மாநிலம் திகழ்வதாக ராகுல்காந்தி கடுமையாக சாடி உள்ளார்.

குஜராத் வந்த ராகுல்காந்தி அங்குள்ள சபர்மதி ஆசிரமத்தில் வணங்கிவிட்டு பின்னர் காங்கிரஸ் கட்சியினரிடம் உரை நிகழ்த்தினர். அப்போது அவர் கூறுகையில் ’’ குஜராத் மாநிலம் போதைப் பொருட்களின் மையமாக விளங்குகின்றது. முந்த்ராபோர்ட்டில் இருந்துதான் அனைத்து போதைப் பொருட்கள் புழக்கமும் நடந்து வருகின்றது. ஆனால் குஜராத் அரசோ எந்த வித நடிவடிக்கையும் எடுக்கவில்லை. இதுதான் குஜராத் மாடல் …. நீங்கள் போராடுவதற்கு , முன்னதாகவே அனுமதி வாங்கும் ஒரு மாநிலம் தான் குஜராத் … யாருக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டுமோ .. அவர்களிடமே அனுமதி வாங்க வேண்டும். சர்தார் வல்லபாய் படேல் விவசாயிகளின் குரலாக இருந்தார். விவசாயிகளுக்கு ஆதரவாக இருந்தார்.. அவருக்காக ஒருபுறம் மிகப் பெரிய சிலையை நிறுவிவிட்டு மறுபக்கம் யாருக்காக அவர் போராடினாரோ பா.ஜ. அரசு அவருக்கு எதிராகவே செயல்படுகின்றது. குஜராத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன் ரூ.3 லட்சம் வரை தள்ளுபடி செய்யப்படும்…. என்றார்.

Next Post

திமுக - காங். கூட்டணி தொடருமா? ஆம் ஆத்மியுடன் நெருக்கம்..! அதிருப்தியில் காங். தலைவர்கள்..!

Mon Sep 5 , 2022
புதுமைப் பெண் திட்ட தொடக்க விழாவுக்கு கெஜ்ரிவாலை அழைத்த விவகாரத்தில் திமுக மீது காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை முதலமைச்சர் முக.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதே நிகழ்ச்சியில் 26 தகைசால் பள்ளிகள், 15 மாதிரி பள்ளிகள் திட்டத்தை டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு கெஜ்ரிவாலை […]
திமுக - காங். கூட்டணி தொடருமா? ஆம் ஆத்மியுடன் நெருக்கம்..! அதிருப்தியில் காங். தலைவர்கள்..!

You May Like