இந்தியாவை யாராலும் பிளவுபடுத்த முடியாது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் காங்கிரஸ் கட்சியினரின் பாரத் ஜோடோ யாத்திரை நிகழ்ச்சியை தொடங்கி வைத்து அக்கட்சியின் முன்னாள் தலைவர் உரையாற்றினார். அவர் கூறுகையில், ’’ தேசியக்கொடி என்பது சாதாரண துணி அல்ல, 3 வர்ணக் கொடி மட்டுமல்ல , சக்கரம் மட்டும்அல்ல அதைக் காட்டிலும் மிகவும் மேலானது. இந்தக் கொடி நம் கைகளுக்கு சாதாரணமாக வரவில்லை. கொடுக்கப்படவில்லை. பரிசாக யாரும் அளிக்கவில்லை. இந்திய மக்களால் மீட்டெடுக்கப்பட்டு வெல்லப்பட்ட கொடி , இந்த தேசிய கொடி இந்தியாவில் வாழும் ஒவ்வொருவரை பிரதிநிதிதுத்துவப்படுத்துகின்றது.’’
’’ ஒவ்வொரு மனிதனின் மதத்தை இது பிரதிபலிக்கின்றது. இந்தியாவில் வாழும் மொழிகளை பிரதிநிதிதுவப்படுத்தப்படுகின்றது. ஒவ்வொரு நபருக்கான கொடி மட்டுமல்ல, இந்தியாவில்ஒவ்வொரு தனிப்பட்ட குடிமகனுக்கான கொடி, தனிப்பட்ட மாநிலத்திற்கான கொடி அல்ல அனைவருக்குமானது., அனைத்து மொழியினருக்குமானது, இந்தக் கொடி அனைத்து விதமதத்தவருக்குமானது. இது தேசத்தின் அடையாளம் மட்டுமல்ல, நமது ஒவ்வொருவரின் அடையாளம் ஆகும். வாழக்கூடிய உரிமைகளை இந்த கொடி உரைக்கின்றது. அவர்களுக்கு விரும்பும் கலாச்சாரத்தை , மொழியை பேச இக்கொடி நமக்கு அளித்துள்ளது. இந்தக் கொடி தற்போது தாக்குதலுக்கும் அச்சத்திற்குட்படுத்தப்பட்டுள்ள. இந்தியா என்பது நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் ஒட்டு மொத்த உருவம். இந்தியா தான் கொடியை பாதுகாக்க வேண்டும். இது தற்போது ஒவ்வொரு ஜனநாயக நிறுவனங்கள் ஆர்.எஸ்.எஸ். , பா.ஜ.க.வினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் இது அவர்களின் தனிப்பட்ட முறையிலானது என நினைக்கின்றார்கள். அவர்கள் மட்டுமே மாநிலத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியும் என நினைக்கின்றனர். சி.பி.ஐ, வருவாய்த்துறை போன்றவற்றை வைத்து அனைவரையும் மிரட்டுகின்றனர். இந்திய மக்கள் ஒருபோதும் அதற்காக பயப்பட மாட்டார்கள். எத்தனை மணி நேரம் எங்களை கேள்வி கேட்கின்றார்கள் என்பதைப் பற்றி எங்களுக்கு கவலை கிடையாது. மொழியால் , மதத்தால் பிளந்துவிடலாம் என நினைக்கின்றது. ஆனால் ஒரு நாளும் இந்தியாவை பிளக்க முடியாது. ஒரே நாடாக எப்போதும் ஒற்றுமையாக இருக்கும். மிகப்பெரிய பொருளாதார நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு வேலையில்லாத்திண்டாட்டம் , பெரிய அழிவை நோக்கி இந்தியா நகர்ந்து கொண்டுவருகின்றது’’ . என்றார்.