தமிழகத்தின் நாகர்கோவில் பகுதியில் நடைபயணம் செய்த காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல்காந்தி திண்ணையில் அமர்ந்து பொதுமக்களுடன் கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
நாகர்கோவில் பகுதியில் 2-வது நாளாக நடைபயணம் மேறகொண்டார். அவருடன் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 118 பேரும் நடைபயணம் மேற்கொண்டுள்ளார்கள். முளகுமூடு சந்திப்பில் உள்ள சமூக அங்கத்தினர்களுடன் ராகுல்காந்தி கலந்துரையாடினார். வீட்டு திண்னையில் அமர்ந்து அவர்களுடன் கலந்துரையாடினார். அவர்களும் பல்வேறு குறைகள் தெரிவித்தனர். மேலும் அரசியல் நிலவரம் மற்றும் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த அவர், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்ததும் இந்த நிலைமை மாறும் காங்கிரஸ் அதை மாற்றும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 150 நாட்கள் நடைபெறும் இந்த நடைபயண தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கன்னியாகுமரி கடற்கரையில் நடைபயணத்தை தொடங்கிய ராகுல் சிறிது தூரம் நடந்து சென்று, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.