சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் திருவான்மியூர், முகப்பேர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தியாகராய நகர் பசுல்லா சாலையில் உள்ள சாய் சுக்கிரன் என்ற நிறுவனத்தின் நிறுவனர் நரேஷ். இவர் தேசிய நெடுஞ்சாலையில் பெயிண்ட் அடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அவரது நிறுவனத்திலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக கடந்த 9ஆம் தேதி அரசு ஒப்பந்ததாரர், பார் உரிமையாளர், கட்டுமான நிறுவன அதிபர் வீடு என சென்னை மாநகரின் பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. அப்போது, சென்னை வேப்பேரியில் போலீஸ் நிலையம் அருகே உள்ள பிரம்மாண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவரும், கட்டுமான தொழில் மற்றும் நிதி நிறுவன தொழிலில் ஈடுபட்டு வரும் தொழில் அதிபர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்நிலையில், இன்று மீண்டும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பணப்பரிமாற்ற புகாரின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read More : Gold Rate | உச்சம் தொட்ட தங்கம் விலை..!! இனி குறையவே வாய்ப்பில்லையாம்..!! சாமானிய மக்கள் அதிர்ச்சி..!!