fbpx

இந்திய ரயில்வேயில் வேலை.. 9900 காலிப்பணியிடங்கள்.. கை நிறைய சம்பளம்..!! மிஸ் பண்ணிடாதீங்க..

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ரயில்வே பணியாளர் தேர்வு வாரியங்கள் (RRBs) உதவி லோகோ பைலட் (ALP) பணியிடங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

சம்பளம், வயது வரம்பு மற்றும் காலிப்பணியிடங்கள்: இந்த பதவிக்கு 7வது சம்பளக் குழுவின்படி, மாத சம்பளம் ரூ.19,900/- ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மருத்துவத் தரநிலை A-1 ஆகும், அதாவது அதிகபட்ச உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 01 ஜூலை 2025 தேதியின்படி 18 முதல் 30 வயது வரை இருக்க வேண்டும். இந்த ஆட்சேர்ப்பு மூலம் மொத்தம் 9900 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான கல்வி தகுதி 10ம் வகுப்பு ஆகும்.

ஆதார் கட்டாயம்: ஆதார் அட்டையில் உள்ள பெயர், பிறந்த தேதி போன்ற விவரங்கள், 10ஆம் வகுப்பு மார்க் ஷீட்டில் உள்ள விவரங்களுடன் 100% பொருந்த வேண்டும். ஆதார் விவரங்களில் மாற்றம் தேவைப்பட்டால், அதை விண்ணப்பிக்கும் முன்பு திருத்தி கொள்ள வேண்டும். மேலும், ஆதார் அடையாளம் (கைரேகை மற்றும் கண் கருவிழிகள்) பதிவு செய்யப்பட வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது? இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், ரயில்வே பணியாளர் தேர்வு வாரியங்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், https://www.rrbchennai.gov.in/ சென்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப செயல்முறை தொடங்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடைசி தேதி: விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 9 மே 2025 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more: பாகிஸ்தான் முதல் வத்திக்கான் வரை.. மத அடிப்படையில் உருவான நாடுகள் எவையெல்லாம் தெரியுமா..?


English Summary

Railway Recruitment Boards (RRBs) have released a new recruitment notification for Assistant Loco Pilot (ALP) posts.

Next Post

யார் கிட்ட பேசிட்டு இருக்க..? மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்..!! கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!!

Tue May 6 , 2025
Police arrested and imprisoned a husband who beat his wife to death in a domestic dispute.

You May Like