தென் தமிழகத்தில் இந்த மாத இறுதியில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அடுத்து 4 நாட்களுக்கு வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த ஒரு மாதமாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த வாரம் தமிழகத்தில் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்தது. கோடைக்காலம் போல வெயில் சுட்டெரித்து வரும் சூழல் இந்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதன்பிறகு தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்தது. குறிப்பாக கடந்த வெள்ளிக்கிழமை தென்காசி, கேரளா எல்லைப் பகுதியில் லேசான மழை பெய்தது.
அதன் பின், வெயில் அதிகரித்தது. ஒருவித அசவுகரியம் இருந்து வந்தது. நேற்று வெளியான வானிலை அறிவிப்பில், இன்னும் ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் வெயிலின் அளவு 2 டிகிரி கூடுவதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில் தான், இந்த மாத இறுதியில் மற்றும் ஏப்ரல் மாத தொடக்கத்தில் தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Read More : ஓடிடியில் வெளியாகிறது “மஞ்சுமெல் பாய்ஸ்”..!! தேதியை அறிவித்தது டிஸ்னி + ஹாட்ஸ்டார்..!!