தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (பிப்ரவரி 22) மற்றும் நாளை (பிப்ரவரி 23) தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னையில் அதிகபட்ச வெப்ப நிலையாக 33-34 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்றும் குறைந்தபட்ச வெப்ப நிலை 24-25 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Read More : Thangam Thennarasu | ஒன்றிய அரசு “அம்மஞ்சல்லி” கூட தரவில்லை..!! நிதியமைச்சர் தங்கம் தென்னரசு காட்டம்..!!