fbpx

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்.. எந்தெந்த மாவட்டங்களுக்கு? . ..

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழ்நாடு , புதுவை, காரைக்கால்பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் , புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ’’ 24.9.2022 முதல் 26.9.2022 வரை தமிழ்நாடு , புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. லேசான மழைஅல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.. 27.9.2022 முதல் இரண்டு நாட்களுக்கு தமிழகம் , புதுவை , காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 37 டிகிரி செல்சியஸ் குறைந்த பட்சம் 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும்.

எனினும் தமிழக கடலோர பகுதிகள் , மன்னார் வளைகுடா மற்றம் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள் , இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்கு வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Next Post

குரங்கு அம்மையின்போது எவ்வாறு நம்மை காத்துக்கொள்ள வேண்டும்….

Sun Sep 25 , 2022
உலக சுகாதார அமைப்பின்படி குரங்கு அம்மை என்பது சர்வதேச அளவில் உலகளாவிய பொது சுகாதார அவரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட கவலைப்படக்கூடிய ஒரு நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது. நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் கூறியிருப்பதைப்போல் 78 நாடுகளில் இது கண்டறியப்பட்டது. இந்த குரங்கு அம்மை , நோய்த்தாக்குதலுக்குள்ளான நபரின் உடையை, ஆடையை அல்லது அவரது படுக்கையை , கைத்துடைக்கும் துண்டு ஆகியவற்றை பயன்படுத்துவதன் மூலமாகவோ தொடுவதன் மூலமாகவோ பரவக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு […]

You May Like