கடந்த வாரங்களில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது புயலாக வலுபெற்றது. அந்த புயலிற்கு மாண்டஸ் என பெயர் வைக்கப்பட்டது. புயல் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர். மழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. இந்நிலையில், தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை முடிவடைந்த நிலையில், இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுச்சேரியில் ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்திற்கு தொடங்கி டிசம்பர் மாதம் இறுதி வரை தொடரும்.ஒரு சில நேரங்களில் ஜனவரி மாதம் முதல் வாரம் வரை நீட்டிக்கும் என தெரிவித்துள்ளனர்.

மேலும், இன்று தமிழக கடலோர மாவட்டங்களான புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை மற்றும் மறுநாள் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரம் வரை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.