fbpx

சம்பவம் செய்யப்போகும் மழை..!! 7 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்..!! வானிலை ஆய்வு மையம் வார்னிங்..!!

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக வெயில் கொளுத்தி வரும் நிலையில், 7 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,
“கிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக, தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இன்று கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் நாளை (மார்ச் 2) தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 3ஆம் தேதி தென்தமிழகத்தில் மிதமான மழை இருக்கும் எனவும், மார்ச் 4ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : ’தமிழக கிராமங்களில் அதிகரித்து வரும் மாரடைப்பு’..!! ’ஒரு வாரத்தில் மட்டும் 174 பேர் பாதிப்பு’..!! பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை..!!

English Summary

While the heat has been scorching in Tamil Nadu for the past few days, the Meteorological Department has stated that there is a possibility of rain in 7 districts today.

Chella

Next Post

தலையில் கை வைத்து கதறி அழுத பெண்..! எச்சரித்த டிரம்ப்..!! ஆடிப்போன ஜெலன்ஸ்கி..!! திடீரென திரும்பிய கேமரா..!!

Sat Mar 1 , 2025
A video of Ukrainian Ambassador to the United States Oksana Markarova sitting with her head in her hands is going viral on social media.

You May Like