fbpx

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி…! 16 மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை…!

தமிழகத்தில் வரும் 8ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 7,8 ஆகிய தேதிகளில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

Vignesh

Next Post

500 மெயில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் விரைவு ரயில்களாக மாற்றம்...! மத்திய அரசு அசத்தல் அறிவிப்பு..‌!

Wed Oct 5 , 2022
ரயில்வே அமைச்சகம் “TRAINS AT A GLANCE” (ரயில்கள் ஒரு பார்வை) என்ற புதிய காலநேர அட்டவணையை அக்டோபர் 1, 2022 அன்று வெளியிட்டது. இது இந்திய ரயில்வேயின் அதிகாரபூர்வ இணையதளமான www.indianrailways.gov.in. –ல் இடம் பெற்றுள்ளது.புதிய காலநேர அட்டவணையின்படி சுமார் 500 எக்ஸ்பிரஸ் ரயில்கள் விரைவு ரயில்களாக மாற்றப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் 10 நிமிடங்கள் முதல் 70 நிமிடங்கள் வரை வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், 130 சேவைகள் (65 […]

You May Like