fbpx

Rain : தமிழகத்தில் இன்று மற்றும் நாளை மிதமான மழைக்கு வாய்ப்பு…! வானிலை மையம் தகவல்

Rain: கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இன்று மற்றும் நாளை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இன்று மற்றும் நாளை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 28 முதல் மார்ச் 2-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும்.தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை 25 டிகிரி முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

English Summary: Due to low circulation, light to moderate rain is likely at one or two places over coastal areas and delta districts of South Tamil Nadu today and tomorrow.

Read More: Prostitution | ’நல்ல சம்பளம் கிடைக்கும்’..!! தாய்லாந்து பெண்களை வரவழைத்து விபச்சார தொழில்..!! ஐடி நிறுவனங்கள் டார்கெட்..!!

Vignesh

Next Post

Ration Card: தூள்...! இன்னும் 3 நாள் தான்... நேரடியாக வீட்டிற்கே வந்து புதுப்பித்திட நடவடிக்கை...! தமிழக அரசு அறிவிப்பு...!

Mon Feb 26 , 2024
மின்னணு குடும்ப அட்டையில் விரல் ரேகை சரிபார்ப்புப் பணி விரைந்து முடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், தற்போது 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு 34,793 ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த குடும்ப அட்டைகள் மூலம் 7 கோடியே 51, 954 பயனாளிகள் பயன்பெறுகின்றனர். ஒவ்வொரு குடும்பமும் ஒரு குடும்பத்திற்கு மாதம் ஒன்றுக்கு 35 கிலோ உணவு தானியங்கள் பெற உரிமை […]

You May Like