fbpx

Rain | இன்று 9 மாவட்டங்களில் மழை..!! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்..!!

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மேற்பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாளை முதல் 22ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் இன்று தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்றும் ஓரிரு இடங்களில் இயல்பில் இருந்து 2 – 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Chella

Next Post

2024-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..‌.!

Thu Aug 17 , 2023
2024-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படும் 2024-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கான ஆன்லைன் பரிந்துரைகள் 2023, மே1 அன்று தொடங்கப்பட்டது. பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் 15, 2023 ஆகும். பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் தேசிய விருதுகள் https://awards.gov.in‌ என்ற இணையதளத்தின் மூலம் பெறப்படும். பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய பத்ம விருதுகள் […]

You May Like